இன்றைய (21-10-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
மனதில் பழைய சிந்தனைகள் மற்றும் நினைவுகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படுவதன் மூலம் லாபம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வதன் மூலம் பகையை தவிர்க்க இயலும். சகிப்புத்தன்மை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அஸ்வினி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பரணி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
கிருத்திகை : லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். சமூகப்பணிகளில் நிதானம் அவசியமாகும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களிடம் கனிவாக பழகுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உத்தியோக பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்படும். சஞ்சலங்கள் மிகுந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.
ரோகிணி : கனிவு வேண்டும்.
மிருகசீரிஷம் : இழுபறியான நாள்.

மிதுனம்
உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்வேகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : பழைய பாக்கிகள் வசூலாகும்.

கடகம்
அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். கலைப் பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சிறப்புகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
புனர்பூசம் : ஆதாயம் ஏற்படும்.
பூசம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்
உறவினர்களின் வருகையினால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். குடும்ப பெரியோர்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். ஒப்பந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : கலகலப்பான நாள்.
பூரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : லாபகரமான நாள்.

கன்னி
எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில பணிகள் காலதாமதமாக நிறைவேறும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். முன்கோபத்தால் சிலரின் நட்புகளையும் இழப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : காலதாமதம் உண்டாகும்.
அஸ்தம் : நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்.
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

துலாம்
செயல்படுத்தும் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுக்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார ரீதியான பணிகளில் லாபம் மேம்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பேச்சுக்களால் ஆதாயம் உண்டாகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.
சுவாதி : அறிமுகம் உண்டாகும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்
உணர்வுப்பூர்வமாக பேசுவதைவிட சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தவறிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். இனம்புரியாத சிந்தனைகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
அனுஷம் : புரிதல் உண்டாகும்.
கேட்டை : சாதகமான நாள்.

தனுசு
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். அனுபவம் மிகுந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூராடம் : தனவரவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : பொறுப்புகள் குறையும்.

மகரம்
மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வியாபார பணிகளில் வேலையாட்களின் மாற்றம் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். பயணங்கள் கைகூடும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : முடிவுகளை எடுப்பீர்கள்.
திருவோணம் : ஆதாயம் உண்டாகும்.
அவிட்டம் : இழுபறிகள் குறையும்.

கும்பம்
எண்ணிய பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தாயாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : திருப்தியான நாள்.
பூரட்டாதி : வெற்றி உண்டாகும்.

மீனம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பொருட்சேர்க்கை உண்டாகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
பூரட்டாதி : எண்ணங்களை அறிவீர்கள்.
உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
ரேவதி : அறிமுகம் ஏற்படும்.