சபரிமலை கோயிலுக்கு காணிக்கை செலுத்த வேண்டுமா? கூகுள் பே மூலம் அளிக்கலாம்!

0
Follow on Google News

சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கை அளிக்க கூகுள் பே வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காலத்துக்கு ஏற்றவாறு பணப்பரிமாற்றம் செய்யும் முறையும் மாறிவருகிறது. டிஜிட்டல் வடிவில் பரிவர்த்தனை செய்யும் கூகுள் போன்ற யூபிஎஸ் ஆப்கள் மளிகைக் கடை முதல் மால்கள் வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து மக்கள் அதை தினம் அன்றாட பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தும் விதமாக கல்யாண வீடுகளில் மொய் வசூல் செய்ய கூட பயன்படுத்தினர்.

இந்நிலையில் இப்போது சபரிமலை கோயில் நிர்வாகம் பக்தர்கள் எளிதாக கோயிலுக்கு காணிக்கை செலுத்த கூகுள் பே வசதியை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதற்காக கோயிலை சுற்றி 22 இடங்களில் க்யூ ஆர் கோட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருந்த படியே 9495999919 என்ற மொபைல் எண்ணுக்கு ‘கூகுள் பே’ செயலி வழியாகவும் காணிக்கை செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.