இந்த நேரங்களில் மட்டும் நீங்கள் டீ, காபி குடிக்க கூடாது… ரத்த அழுத்தம் ஏற்படுமாம்… வெளியான ஆராய்ச்சி தகவல்..

0
Follow on Google News

ஒவ்வொரு நாள் காலைப் பொழுதும் டீ அல்லது காபியுடன்தான் ஆரம்பமாகிறது. உணவு இல்லாமல்கூட இருப்பதுண்டு, டீ இல்லாமல் வேலையே ஓடாது என்ற நிலையில் பலர் இருக்கின்றனர். இந்தப் பழக்கத்தைக் குழந்தைகளும் கடைப்பிடிக்கின்றனர். டீ, காபி போன்ற கஃபைன் இருக்கும் பானங்கள், மூளைக்குப் புத்துணர்ச்சி அளிப்பதோடு சுவையாகவும் இருப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவற்றை விரும்பிப் பருகுகின்றனர்.

கஃபைன் உணவுகள் அல்லது பானங்கள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவற்றால் தீமையும் இருப்பதாக, ஆய்வு தெரிவித்துள்ளது. அந்த வகையில் டீ, காபி குடிப்பவர்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது. ஐசிஎம்ஆர், தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் (NIN) இணைந்து மக்களுக்கு ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் 17 புதிய உணவு வழிகாட்டுதல்களை வழங்கியது.

அதில் அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கிய உணவுகள் குறித்தும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையும் ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சமூகத்தில் டீ, காபி மீது உள்ள முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, அவற்றை அதிகமாக குடிப்பதன் மூலம் அவை உடல்நலனில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விரிவாக குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலான இந்தியர்களின் தவிர்க்க முடியாத பழக்கங்களில் ஒன்று காலையில் காபி குடிப்பது.

காபி குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன, காபியில் உள்ள காஃபின் ஆற்றல் அளவை அதிகரிக்கவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும், உடல் செயல்பாடுகளின் போது செயல்திறனை மேம்படுத்தவும் உதவும். காபி நுகர்வு வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்துடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சி கூறுகிறது, இதற்கு அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக இருக்கலாம்.

ஆனால் காபி குடிக்க சிறந்த நேரம் எது தெரியுமா? காலை எழுந்த பிறகு ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு பிறகு காபி குடிப்பது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். காலை எழுந்த உடன் ஒரு கிளாஸ் தண்னீர் குடித்துவிட்டு, அதன்பின்னர் 2 மணி நேரத்திற்கு பின்னர் தான் காபி குடிக்க வேண்டுமாம். முடிந்தால் காலை உணவு சாப்பிட்ட பிறகு காபி குடிக்கலாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது உங்கள் உடலை ரீஹைட்ரேட் செய்யவும் மற்றும் நாள் முழுவதும் உங்கள் ஆற்றல் பயன்பாட்டிற்கான தயார்படுத்தும். இதன் மூலம் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் சில சமயங்களில் ஏற்படும் அசௌகரியத்தையும் தடுக்கலாம்.

டீ மற்றும் காபியில் காஃப்பின் இருக்கும். இது மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டுவது மட்டுமின்றி, உடலியல் சார்பையும் தூண்டும் என ஐசிஎம்ஆர் அதன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளது. 150 மில்லி லிட்டர் வடிகட்டப்பட்ட காபியில் 80-120 மில்லி கிராம் காஃப்பினும், அதே அளவு இன்ஸ்டன்ட் காபியில் 60-65 மில்லி கிராம் காஃப்பினும் இருக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 150 மில்லி லிட்டர் டீயில் 30-65 மில்லி கிராம் காஃப்பின் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. அதாவது, ஒருநாளைக்கு ஒருவர் 300 மில்லி கிராம் காஃப்பினை எடுத்துக்கொள்வதே ஆரோக்கியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காபி, டீயை உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பும், சாப்பிட்டபின்பு ஒரு மணி நேரம் வரையும் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் உள்ள டேனினின்ஸ் என்ற ரசாயனம், உணவில் உள்ள இரும்புச்சத்துடன் இணைகிறது. இதனால் உடம்புக்கு தேவையான இரும்புச் சத்து சரியாக உறிஞ்சப்படுவதில்லை. இது இரும்புசத்து குறைபாடு, ரத்தச் சோகை ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும், காபியை அதிகம் குடித்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய பிரச்சினைகள் ஏற்படலாம்.

தேநீரை பால் சேர்க்காமல் குடித்தால் பல பலன்கள் உள்ளது என தெரிவித்துள்ளது. இதனால், ரத்த ஓட்டம் சீராகும். இதய நோய், வயிற்றுப் புற்றுநோய் ஆகியவற்றின் வாய்ப்பை குறைக்கும் எனவும் ஐசிஎம்ஆர் அதன் புதிய வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது. மேலும், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மாமிசங்கள், கடல் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்படியும், எண்ணெய், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை குறைவாக எடுத்துக்கொள்ளும்படியும் தெரிவித்துள்ளது.