கேரளா : திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கோழிக்கோட்டில் வீட்டு வாடகை கொடுக்காததால் வீடு காலி செய்ய சொன்ன ஓனர் மீது பொய் பலாத்கார புகார் கொடுத்த பெண் எஸ்ஐ சஸ்பென்ட். கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் கோழிக்கோட்டு உள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்ஐ உக பணிபுரிந்து வருபவர் சுகுண வள்ளி.
இவர் கமிஷனர் அலுவலகத்தின் அருகே உள்ள பன்னியங்கரை பகுதியில் அவரது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் பல மாதங்களாக வாடகை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். அந்த வீட்டின் ஓனர் அவரிடம் பலமுறை வாடகை கேட்டும் தராததால் வீட்டைக் காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதுகுறித்து வீட்டின் ஓனர் பன்னியங்கரை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து பன்னியங்கரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர், ஆனால் எஸ்ஐ சுகுணவள்ளி செல்லவில்லை. தற்போது எஸ்ஐ சுகுணவள்ளி சில தினங்களுக்கு முன்பு அதே பன்னியங்கரை காவல் நிலையத்தில் தான் குடியிருக்கும் வாடகை வீட்டின் ஓனர் மகளின் கணவர் தன்னை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக புகார் ஒன்றை அளித்தார். மேலும் தன்னுடைய முக்கிய மோதிரத்தையும் அவர்கள் புடுங்கி விட்டதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
எஸ்ஐ சுகுணவள்ளி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒனரின் மகளின் கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் பன்னியங்கரை தான் உண்மை தெரிய வந்தது. அந்த பெண் எஸ்ஐ கொடுத்த அந்த பலாத்கார புகார் பொய் என்று தெரிந்தது. இந்த புகார் குறித்து பன்னியங்கரை போலீசார் கமிஷனருக்கு தகவல் கொடுத்தனர்.
கமிஷனர் உடனடியாக இந்தப் புகார் குறித்து விசாரிக்க உதவி கமிஷனருக்கு உத்தரவிட்டார். உதவி கமிஷனரின் தீவிர விசாரணையிலும் எஸ்ஐ சுகுணவள்ளி கொடுத்த பலாத்கார முயற்சி புகார் பொய் என்று தெரியவந்தது. இதையடுத்து எஸ்ஐ சுகுணவள்ளியை கமிஷனர் சஸ்பெண்ட் செய்தார். ஒரு பெண் எஸ்ஐ பொய் பலாத்கார புகார் கொடுத்திருப்பது கேரளாவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.