ராஜஸ்தான் : இந்திய கலாச்சாரம் மேற்கத்திய கலாச்சாரமாய் மாறிவரும் வேளையில் டிவி சீரியல்கள் மற்றும் திரைப்படங்கள் தங்களது பங்கிற்கு கலாச்சார சீரழிவை ஏற்படுத்திவருகின்றன. அதிலும் சீரியல்கள் அபத்தத்தின் உச்சகட்டம். கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பமாகி தனிக்குடும்பம் தனியாளாக என மாறி நிற்கும் சமூகத்தை காணும் துயர நிலையில் நாம் உள்ளோம்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில்வசித்துவரும் ஒரு பள்ளியின் முதல்வர் தனது மனைவி டார்ச்சர் செய்வதோடு தன்னை தினமும் அடித்து துன்புறுத்துகிறார் என நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆதாரமாக சமூகவலைத்தளத்தில் உலவும் வீடியோக்களை சமர்ப்பித்ததோடு தந்து மனைவி தன்னை அடித்த சிசிடிவி காட்சிகளையும் சமர்ப்பித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் கர்காரா அரசுப்பள்ளியில் முதல்வராக பணிபுரிபவர் அஜித் யாதவ். அவரது மனைவி அவரை வீட்டிற்கு வரும்போதெல்லாம் அடிக்கிறாராம். மனைவியின் செயலை ஆதாரத்துடன் காவல்துறையில் புகாரளிக்க தனது வீட்டில் மனைவிக்கு தெரியாமல் சிசிடிவியை பொருத்தியுள்ளார். சம்பவத்தன்று அவரை மனைவி அடித்தது பதிவாகியுள்ளது.
மனைவி அடிக்கையில் அஜித் யாதவ் வீட்டின் ஒரு மூலைக்கு ஓடுகிறார். விடாமல் துரத்தி சென்ற அவரது மனைவி வீட்டில் இருந்த கிரிக்கெட் பேட், இரும்பு சட்டி உட்பட சில ஆயுதங்களை கொண்டு அஜித்தை தாக்கும் காட்சி சிசிடிவியில் பதிவானது. அடிதாங்க முடியாத அஜித் காவல்நிலையம் சென்றார். அங்கு காவல்துறையினரிடம் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மனைவியை கைது செய்யுமாறு புகாரளித்தார்.
மேலும் ஆல்வார் நீதிமன்றத்திலும் மனு ஒன்றை அளித்தார். மனுவில் தனது மனைவி சிறுவனான தனது மகன் கண்முன்னரே கடுமையாக மனைவி சுமன் யாதவ் தாக்கியதாகவும் அதற்கான ஆதாரங்கள் வீடியோவாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் கணவர் அஜித்திற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் மனைவி மீது வழக்கு பதியவேண்டாம் எனவும் அவருக்கு அறிவுரை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. மனைவியே கணவனை ஓடஓட அடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.