நேருவால் செய்ய முடியாததை நாங்கள் செய்கிறோம்…! மத்திய அரசு தகவல்…

0
Follow on Google News

புதுதில்லி : பிரிட்டிஷார் இயற்றிய சட்டம் மேதகு அம்பேத்கார் மற்றும் 11 பேர் கொண்ட குழுவால் 1950 ஜனவரி 26 ல் அப்படியே வரிகள் மாறாமல் பிரதியெடுக்கப்பட்டு இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதிலும் 124ஏ தேசத்துரோக சட்டம் 1870களில் தாமஸ் பாபிங்டன் மெக்காலே என்பவரால் இயற்றப்பட்டது. பரங்கிதலையானால் இயற்றப்பட்ட அந்த சட்டம் சிறிதும் மாற்றப்படாமல் தற்போதுவரை இந்திய நீதிமன்றங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு 124 ஏ வின்படி வார்த்தையாலோ அல்லது எழுத்துக்களாலோ அல்லது எதையாவது அடையாளப்படுத்தியோ அல்லது காட்சிப்படுத்தியோ அல்லது வெறுப்பைத்தூண்டும் வகையிலோ அல்லது கண்டனம் தெரிவித்தாலோ மூன்று வருடம் சிறைத்தண்டனை இந்த சட்டத்தின் மூலம் பெற நேரிடும். மேலும் துணைபிரிவாக அபராதமும் விதிக்கப்படலாம்.

இந்த சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றால் ஜாமீன் கிடைக்காது என்பது கவனிக்கத்தக்கது. இந்த சட்டப்படி தண்டனை பெற்றவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்காது. அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. நீதிமன்றமோ காவல்துறையோ கூப்பிடும் நேரத்தில் நேரில் சென்று ஆஜராக வேண்டும். இதனிடையே மும்பையில் எம்பி எம்.எல்.ஏ தம்பதிகள் மீது சிவசேனா அரசால் போடப்பட்ட தேசத்துரோக வழக்கு தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த வழக்கில் மத்திய அரசு 124ஏ பிரிவை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்தது. அதைத்தொடர்ந்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானார்.

அவர் வாதிடுகையில் “நாம் அரசியலமைப்பிற்கு பிந்தைய காலத்தில் இருக்கிறோம். ஜவஹர்லால் நேரு இந்த சட்டத்தை அருவருப்பானது கூறியிருக்கிறார். அதிலிருந்து வெளியேறவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்” என வாதிட்டார். இதற்க்கு மத்திய அரசின் சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ” ஜவஹர்லால் நேருவால் செய்யமுடியாததை தற்போதைய மத்திய அரசு செய்துவருகிறது.

அப்போது பண்டிட் நேருவால் செய்யமுடியாததை நாங்கள் செய்ய முயற்சித்து வருகிறோம். உரிமைகள் மற்றும் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு ப்பார்வையில் இந்த 124ஏ சட்டத்தை மறுபரிசீலனை செய்ய தயாராக இருக்கிறோம். காலனித்துவம் முற்றிலும் அகற்றப்பட்டு வருகிறது” என பதிலடியாக வாதிட்டார் துஷார்.

மேலும் தேசத்துரோக வழக்கில் பிரமாண பத்திரத்தை ஏற்கனவே தாக்கல் செய்த மத்திய அரசு 124 ஏ சட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. அப்படி மாற்றியமைக்கும் பட்சத்தில் உள்நோக்கத்துடன் பழிவாங்கல் முயற்சியில் இந்த சட்டத்தை மாநில அரசுகள் பயன்படுத்த முடியாது என உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.