இன்றைய (13-11-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வரவுகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.
பரணி : நம்பிக்கை அதிகரிக்கும்.
கிருத்திகை : தெளிவு கிடைக்கும்.

ரிஷபம்
வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் புதுவிதமான முயற்சிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உற்சாகமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கிருத்திகை : தடைகள் நீங்கும்.
ரோகிணி : அனுபவங்கள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்
வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேலோங்கும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : மதிப்பு அதிகரிக்கும்.
திருவாதிரை : மாற்றங்கள் உண்டாகும்.
புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.

கடகம்
எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்தநிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் ஒருவிதமான சோர்வை ஏற்படுத்தும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : மந்தமான நாள்.
பூசம் : காலதாமதம் ஏற்படும்.
ஆயில்யம் : பொறுமை வேண்டும்.

சிம்மம்
பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு ஏற்ப உயர்வு கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவால் சாதகமான சூழல் அமையும். இன்பமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
மகம் : உயர்வு கிடைக்கும்.
பூரம் : லாபகரமான நாள்.
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.

கன்னி
வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். மாற்றங்கள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம்
எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கல்வி தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். மனதில் பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : வரவுகள் மேம்படும்.
சுவாதி : மந்தமான நாள்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.

விருச்சிகம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்தவந்த பிரச்சனைகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கு ஏற்ப உயர்வும், அங்கீகாரமும் கிடைக்கும். பயணங்கள் கைகூடும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
விசாகம் : பிரச்சனைகள் நீங்கும்.
அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
கேட்டை : அங்கீகாரம் கிடைக்கும்.

தனுசு
வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உடன்பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் நற்செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு ஏற்படும். ஒத்துழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : காரிய சித்தி உண்டாகும்.

மகரம்
வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
திருவோணம் : நெருக்கடிகள் குறையும்.
அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

கும்பம்
வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் புதுவகையான சிந்தனைகள் உண்டாகும். கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : தேவைகள் பூர்த்தியாகும்.
சதயம் : ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.

மீனம்
புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்வது தேவையற்ற பகையை தவிர்க்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் தொடர்பான புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.