சமூக வலைத்தளத்தை தன் பக்கம் கவர்ந்து வருகிறார் கார்த்திக். வைல்ட் கார்த்தி (Wild Karthi) என்ற யூடியூப் சேனல் மூலம், இவர் செய்து வரும் விசித்திர முயற்சிகள் வியக்க வைக்கிறது. சமூக வலைத்தளத்தில் ஒரு பொழுதுபோக்கு தளமாக விளங்குவது யூடியூப். இந்த யூடியூபில் தளத்தில் பார்வையாளர்களை கவர பொழுதுபோக்கு நிறைந்த வீடியோக்களை தங்களுடைய யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.
இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் ஏராளமான யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளது. யூடியூப் பக்கத்தில் பார்வையாளரை கவரும் விதமாக புதிய புதிய கண்டெண்ட்களை செய்து வருகின்றார்கள். இதில் பார்வையாளர்களை கவரும் விதமாக ஒருவர் அவரது யூடியூப் சேனலில் புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளார்.
யார் அவர்? என்ன செய்தார்? பார்ப்பதற்கே ஆப்ரிகன்ஸ்ஸ் போன்று இருப்பவர் தான் இந்த கார்த்தி ஆனால் இவர் ஒரு தமிழர். இவர் வைல்ட் கார்த்தி (Wild Karthi) என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். இதில் குறைந்த அளவிலான வீடியோக்களை பதிவு செய்துள்ளார். ஆனால் அதை பார்க்கும்போது அனைவரையும் வியக்க வைக்கிறது. கடல்வாழ் உயிரினங்களான இறால், சிப்பி மற்றும் கோழி இறைச்சியை காட்டுவாசிகள் போன்று பச்சயாக சாப்பிடுவது அதை வீடியோவாக பதிவு செய்து இவரது சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
கடல் உயிரினங்களை இவர் பச்சையாக சாப்பிடும்போது சிலருக்கு அருவருப்பு தக்கதாக இருந்தாலும் இருந்தாலும் மற்றொரு பக்கம் பார்வையாளர்களை கவர வைக்க இந்த காட்டுவாசி கார்த்தி செய்வது அனைவராலும் கவரப்பட்டு வருகிறது.