செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர்.! விண்கலத்தை வழிநடத்தும் இந்திய பெண்.!

0
Follow on Google News

செவ்வாய் கிரகத்தை மேலும் ஆய்வு செய்ய அமெரிக்க நாசாவின் விண்கலமான ரோவார் அங்கு தரையிறக்கபடிருக்கின்றது. இந்த திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் இந்தியாவை பூர்விகமாக கொண்ட ஸ்வாதி மோகன் என்பவர் பெங்களூரில் பிறந்து மிக சிறிய வயதில் அமெரிக்காவில் குடியேறியவர், சிறந்த கல்வியாற்றலால் மிகபெரிய இடத்தை எட்டியிருக்கின்றார். அமெரிக்க நாசாவின் விண்கலமான ரோவார் ஆய்வு கருவி என்பது மற்ற கருவிகளில் இருந்து வேறுபட்டது.

இந்த ரோவார் துளையிடும் தன்மை கொண்டது, இதுவே ஆய்வு செய்து அந்த தகவலை அனுப்பும், அது போக இதில் சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்றும் உண்டு அது மேல் பறந்து படங்களை எடுக்கும். ரோவரின் இயக்கம் ஒரு தரை வண்டு நடமாடும் தன்மையினை கொண்டு உருவாக்கபட்டிருப்பதால் அது கவிழ்வதோ பாறைகளில் முட்டி தடுமாறுவதோ சாத்தியமில்லை, செவ்வாய்க்கும் பூமிக்கும் தூரம் அதிகம் என்பதல்ல விஷயம் , தொலைதொடர்பு எடுக்கும் நேரம்தான் மிக பெரிய சிக்கல்.

செவ்வாயில் இருந்து ஒரு செய்தி அனுப்பினால் பூமிக்கு அது வர 7 நிமிடமாகும் , இங்கிருந்து கட்டளை பிறப்பித்தால் அது அங்கு சென்று அடைய அதே நேரம் எடுக்கும், ஆக ஒரு கட்டளை செயல்படுத்தபட கிட்டதட்ட 14 நிமிடம் ஆகும். மானிட இனம் இன்னும் மிகபெரிய பாய்ச்சலை காட்டினால்தான் வான்வெளியில் மிக பெரிய சாதனைகளை செய்யமுடியும் எனினும் இப்போது இச்சிக்கலை களைய பெரும்பான்மை பணிகளை ரோவர் கலம் பூமி கட்டளையினை எதிர்பாராமல் அதுவே செய்ய செயற்கை அறிவூட்டல் முறையில் உருவாக்கபட்டாயிற்று.

பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதும். செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து புதிய ரோவர் எடுத்த முதல் புகைப்படத்தையும் பெர்சிவரன்ஸ் ரோவர் அனுப்பியுள்ளது.இந்த நிலையில் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை வழிநடத்தும் குழுவின் தலைவரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வாதி மோகனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறன.