மகனுக்கு மொட்டை அடிக்கும்போது அழுது தாயின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக மொட்டை அடிக்கும்போது குழந்தைகள் அழுது பார்த்திருப்போம் ஆனால் இங்கு நடந்தது வேறு.
மும்பையில் உள்ள ஐஸ்வர்யா கவுஷிக் சேத் என்பவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் தனது மகனுக்கு மொட்டை அடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெற்றி பெற்ற உறவினர்கள் அமர்ந்தது நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டு இருந்தனர். மொட்டையடிக்கும் மகனின் அறிகி லேனே அவரது தாயும் அமர்ந்திருந்தார்.

குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கும் நிகழ்ச்சியில், மொட்டை அடிக்கும்போது குழந்தைகள் கதறி அழுவதை பார்த்து இருக்கிறோம். ஆனால் இங்கு நடந்ததோ வேறு. தனது மகனுக்கு மொட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது அருகில் இருந்த தாய் முதலில் பார்த்து வியப்புடன் ரசித்துக் கொண்டிருந்தார். திடீர் என்று அந்தத் தாயின் கண்ணீர் பெருக்கெடுத்தது. இந்த வீடியோ காட்சியை தான் ஐஸ்வர்யா கவுஷிக் சேத் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவின் கீழே சிலர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் மேலும் சிலர் தாய் மற்றும் மகனின் பாசப் போராட்டத்தை பார்த்து ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.