பயங்கரவாதத்தை வளர்க்கும் கேரளம் ..! பாஜக தலைவர் ஜேபி நட்டா கடும் தாக்கு ..

0
Follow on Google News

கேரளா : இந்தியாவில் கேரள மாநிலத்தில் இருந்து மட்டுமே அதிக அளவில் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பில் சேர ஆண் பெண் என இருபாலினத்தவரும் செல்வதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் கேரளாவில் பல மாநிலங்களில் தடைசெய்யப்பட்ட அமைப்பான PFI மற்றும் SDPI இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த இரு அமைப்புகளும் கேரளாவில் நடந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி பிரமுகர்கள் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

பிஜேபி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரண்டுநாள் பயணமாக கேரளா சென்றுள்ளார். அங்கு மாநில பிஜேபி சார்பில் நடைபெற்ற பேரணியில் நட்டா உரையாற்றினார். அவர் கூறுகையில் “சிபிஐஎம் தலைமையிலான இது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) அரசு சமூகத்திலுள்ள அனைத்து தரப்பினரையும் சமமாக நடத்துவது போல ஒரு போலியான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால் அவர்களின் கொள்கை எப்போதுமே போலி மதசார்பின்மை மட்டுமே. சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு மட்டுமே சிறப்பு சலுகைகள் அளித்துவிட்டு மற்றபிரிவினர்களை பிரித்து வைக்க முயற்சிக்கிறது. இடதுசாரிகள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறார்கள். பயங்கரவாதம் சிபிஐஎம் அரசாங்கத்தின் அனுசரணையை பெறுகிறது. கேரளா பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மையமாக மாறியுள்ளது.

கேரள சமூகம் பெரும் அசௌகரியத்தில் உள்ளது என உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கேரளாவில் மக்கள்தொகை பெருக்கம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்துகிறது.மதத்தலைவர்கள் அதிலும் குறிப்பாக கிறித்தவ மத தலைவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். கிறித்தவ சமூகம் போதை ஜிஹாத் குறித்து தனது கவலைகளை தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது.

கேரளாவில் மட்டுமே கடந்த 15 ஆண்டுகளில் அரசியல்கொலைகள் அதிகம் நடைபெற்றிருக்கிறது. மாநிலத்தில் வன்முறைகள் கடுமையாக அதிகரித்துள்ளது. 2016 ல் 55 அரசியல் கொலைகள் நடந்துள்ளது. முதல்வர் பினராய் விஜயனின் சொந்த மாவட்டமான கண்ணூர் மாவட்டத்தில் 12 கொலைகள் நடந்துள்ளன. கடந்த மூன்றாண்டுகளில் 1019 கொலைகள் நடைபெற்றுள்ளது.

இடதுசாரிகளின் பிடியில் உள்ள கேர்ளா சட்டவிரோத செயல்கள் மற்றும் ஊழல் நிறைந்த மாநிலமாக உள்ளது” என குறிப்பிட்டார். மேலும் பிரதமர் மோடியின் நலத்திட்டங்களான கிசான் சம்மன் யோஜனா, ஜல்ஜீவன், ஜன்தன் யோஜனா உள்ளிட்டவற்றை பற்றி எடுத்துரைத்தார். கடந்த மூன்று மாதங்களில் 15க்கும் மேற்பட்ட அரசியல் கொலைகள் கேரளமாநிலத்தில் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.