அதிகமான கால்சியம் சத்து உள்ள பாலக் கீரை சப்பாத்தி செய்வது எப்படி.?

0
Follow on Google News

அனைவருக்கும் வணக்கம், இன்று நம் ஆரோக்கிய சமையலில் நாம் பார்க்கப் போவது பாலக் கீரை சப்பாத்தி. பாலக் கீரையில் அதிகமான கால்சியம் சத்து உள்ளது. பாலக் கீரையில் பாசிப்பருப்பை போட்டு கூட்டு செய்து இருப்போம், இன்று ஒரு வித்தியாசமான முறையில் சப்பாத்தி செய்வது எப்படின்னு பார்க்கலாம்.

அதற்கு தேவையான பொருட்கள்:-
★கோதுமைமாவு -1/4 படி,
★பாலக்கீரை-ஒரு கட்டு,
★மிளகுத் தூள்-2 தேக்கரண்டி,
★சீரகம்-1 தேக்கரண்டி

செய்முறை:- ஒரு வாணலியில் இரண்டு டம்ளர் தண்ணீர் கொதிக்க விடவும். ஒரு கட்டு பாலக் கீரையை நன்றாக தண்ணீரில் அலசி சுத்தம் செய்துக் கொள்ளவும். தண்ணீர் போக கீரையை எடுத்து அந்த கொதிக்கிற தண்ணீரில் போட்டு அடுப்பை அணைத்து விடவும். பத்து நிமிஷம் விட்டு விடுங்கள். அந்த தண்ணீரை கூட வீணாக்க வேணாம். கீரையை மிக்சியில் சீரகம் சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையுடன் தண்ணீரையும் சேர்த்து, கோதுமை மாவு, மிளகுத்தூள் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

ஒரு பத்து நிமிடங்கள் அப்படியே மாவை ஊற விட்டு விடவும். மாவை எடுத்து உருண்டையாக பிடித்து சப்பாத்தியாக தேய்த்து நமக்கு பிடிச்ச கிரேவியுடன் பரிமாறினால் பாலக்கீரை சப்பாத்தி ரெடி. நேயர்களே! இந்த சத்தான சமையலை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்து பயன்பெறுங்கள்.
நன்றி ~திருமதி. சுகன்யா தேவி முத்துராமன்