பேரிச்சம்பழ லட்டு செய்வது எப்படி.?

0
Follow on Google News

அனைவருக்கும் வணக்கம், இன்று நம் ஆரோக்கிய சமையலில், ஒரு சத்தான எளிமையான முறையில் பேரிச்சம்பழ லட்டு எப்படி செய்வது என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். பேரிச்சம்பழம் உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமானது, சத்து மிக்கது மற்றும் ரத்த விருத்திக்கு மிகவும் பயன்படும். இந்த ரெசிபியில் நாம் நல்ல கொழுப்புகளை தரும் முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகளை பயன்படுத்துவதால், இது நம் உடலுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:-
★பேரிச்சம் பழம்-200 கிராம்
★முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு-10
★கசகசா-ரெண்டு தேக்கரண்டி
★தேன்-இரண்டு தேக்கரண்டி

செய்முறை:- முதலில் பேரிச்சம் பழங்களை எடுத்து, அதன் கொட்டையை நீக்கிவிட்டு நன்றாக கைகளால் மசித்துக் கொள்ள வேண்டும். பிறகு, நமக்கு பிடித்த நட்ஸ்களை(பாதாம்/முந்திரிப் பருப்பு/வேர்க்கடலை/பிஸ்தா) மிக்ஸியில் தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் சேர்த்து கலந்து, அத்துடன் தேன் சிறிதளவு ஊற்றி உருண்டையாக லட்டு போன்று பிடிக்கவும்.

உருண்டைகளை கசகசாவில் பிரட்டி எடுத்தால் சுவையான பேரிச்சம்பழ நட்ஸ் லட்டு தையார் ஆகிவிட்டது. மேலும், இந்த ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்து பயன்பெறவும்.
நன்றி ~திருமதி க. சுகன்யாதேவி முத்துராமன் இந்த ரெசிபியை வீடியோவில் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.