அனைவருக்கும் பிடித்த பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி.?

0
Follow on Google News

அனைவருக்கும் வணக்கம், இன்று நம் ஆரோக்கிய சமையலில் நாம் பார்க்கப்போவது பாகற்காய் சிப்ஸ். அனைவருக்கும் பிடித்த இந்த சிப்ஸ் ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:-
★பாகற்காய்-இரண்டு
★கடலைமாவு-3 தேக்கரண்டி
★அரிசி மாவு அல்லது மைதா மாவு-2 தேக்கரண்டி
★மஞ்சள் தூள்-ஒரு சிட்டிகை
★மிளகாய்த்தூள்-ஒரு தேக்கரண்டி
★எண்ணெய் – தேவையான அளவு
★உப்பு-சிறிதளவு

செய்முறை:- பாகற்காயை எடுத்து நன்றாக கழுவி கொண்டு, அதை வட்டவட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். பாகற்காயில் விதைகளை எடுத்து விடலாம், அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்து ஒரு 10 நிமிடங்கள் ஊறவிடவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்திருக்கும் பாகற்காய் கலவையை ஒவ்வொன்றாக போட்டு எடுத்தால் சுவையான பாகற்காய் சிப்ஸ் தயாராகிவிடும்.

பாகற்காயை பொரியலாக செய்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இந்த மாதிரி சிப்ஸ் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்புவர். எனவே இந்த ஆரோக்கியமான ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து பார்த்து பயன்பெறுங்கள்.
நன்றி ~திருமதி க. சுகன்யாதேவி முத்துராமன்
இந்த ரெசிபியை வீடியோவில் காண கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்.