ஒரு நாளைக்கு 8 கோடி …. சமோசா விற்பனை செய்துகொண்டு மல்டி மில்லியராக வலம் வரும் தம்பதியினர்… நீங்களும் ட்ரை பண்ணலாமே…

0
Follow on Google News

இன்றைய சூழலில் பலரும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களாக இருக்கிறோம். இருப்பினும் கூட சுயதொழில் கைக்கொடுக்குமா? நஷ்டமடைந்தால் என்ன செய்வது? என்ற கேள்விகள் எழுவதால் தொழில் தொடங்கும் முயற்சியை அப்படியே கைவிட்டுவிட்டு தொடர்ந்து கார்ப்பரேட் அல்லது சாதாரண நிறுவனங்களில் மாதசம்பளத்துக்கு பலரும் வேலை செய்து வருகின்றனர்.

இப்படி தொழில் தொடங்க பயப்படும் நபர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தான் பெங்களூரில் ஒரு தம்பதி சாதித்து காட்டியுள்ளனர். மேலும் தொழில் தொடங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த தம்பதி முன்னுதாரணமாகி உள்ளனர். இந்தியாவில் அதிகமானவர்கள் விரும்பி உண்ணும் திண்பண்டங்களில் டாப் 10 இடங்களில் சமோசாவுக்கு இடம் உண்டு.

இன்னும் சொல்லப்போனால் பலரும் சிற்றுண்டியாக சமோசாவை சாப்பிடுகின்றனர். இன்னும் சிலருக்கே சமோசா இன்றி டீ, காபி என்பது இனிக்காது எனவும் கூறலாம். ஏனென்றால் சமோசா என்பது இன்றைய காலத்தில் பலரின் பேவரைட் ஐயிட்டங்களில் ஒன்றாக உள்ளது. இதில் ஏழை, பணக்காரர்கள் என்ற வித்தியாசமும் இல்லை. பாமரன் முதல் பலகோடிகளுக்கு அதிபதியானவர்கள் வரை அனைவரும் சமோசாவை விரும்பி சாப்பிடுகின்றனர்.

இந்நிலையில் தான் சமோசா விற்பனை செய்யும் தம்பதி ஒரு நாளைக்கு ரூ.12 லட்சம் சம்பாதிக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. இதை சட்டென படித்தால் உங்களால் நம்ப முடியாது தான். ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள தானே பகுதியில் சமோசா சிங் என்ற உணவகம் அமைந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் நிதி சிங் மற்றும் அவரது கணவர் எஸ்வி சிங். ஷிகர் வீர் சிங் பயோகான் நிறுவனத்தில் முதன்மை சயின்டிஸ்ட்டாக பணியாற்றி வந்த அவருக்கு நல்ல சம்பளம் கிடைத்து வந்தது. அதே போல் அவரது மனைவி நிதி சிங் குர்கிராமில் உள்ள பிரபல மருந்து நிறுவனத்தில் ரூ.30 லட்சம் சம்பளத்தில் பணியில்இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தான் ஷிகர் வீர் சிங் – நிதி சிங் தம்பதி சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என முடிவு செய்தனர். இந்தியாவில் பாப்புலராக இருக்கும் ஸ்ட்ரீட் புட்டான சமோசாவை வைத்து தொழில் செய்ய வேண்டும் என்று நிதி சிங்கிற்கு எண்ணம் தோன்றியுள்ளது. இதனால், தங்களுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு உணவகம் ஒன்றினை தொடங்கியுள்ளனர்.

அங்கு, ஆரோக்கியமான சமோசாக்களை விற்பனை செய்து வந்தனர். வியாபாரம் வேகமாக வளர்ச்சி அடைந்தது. அவர்கள், சமோசாவுடன் தங்களது பெயரான சிங்கை இணைத்து சமோசா சிங் என்று பெயர் வைத்தனர். கொரோனா காலத்தில் மக்கள் வெளியில் வரமுடியாத நேரங்களில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் சமோசாக்களை டெலிவரி செய்து வந்தனர். இதனால், மக்களுக்கு பிடித்து ஆர்டர்கள் குவிந்தன.

தற்போது, மல்டி மில்லியன் கம்பெனியாக சமோசா சிங் நிறுவனம் உருவெடுத்துள்ளது. இதைப்பற்றி கணவன், மனைவி கூறுகையில், வானவில்லை ரசிக்க வேண்டுமென்றால் மழையில் நனையாவிட்டால் எப்படி என்று கூறியுள்ளனர். 180 பேர் வேலை செய்யும் சமோசா சிங் நிறுவனத்தில் தினமும் 8 கோடி சமோசாக்கள் விற்பனையாகிறது. இந்நிலையில், சமோசா சிங் பிராண்டை பான் இந்தியா அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறுகின்றனர். மேலும், இவர்களின் வருமானம் கோடிகளில் உள்ளது.