வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற குழப்பம் நீடித்து வருகிறது,எந்த ஒரு கட்சியும் தனது கூட்டணியை இறுதி செய்யாமல் இழுபறி நீடித்து வருகிறது, அதிமுகவினர் தாங்கள் தான் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றன,இதற்கு காரணம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் பலவீனம் எனக் கூறப்படுகிறது,கடந்த ஐந்து வருடங்களில் முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக எந்த ஒரு வலுவான குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தரப்பில் இருந்து வைக்கத் தவறிவிட்டனர்.
மேலும் இடையில் வந்த இடைத்தேர்தலில் திமுக கோட்டை விட்டது மூலம் தொடர்ந்து அதிமுக மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்து வருகிறது, ஆனால் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அடுத்த முதல்வர் தான்தான் என்ற நம்பிக்கையில் உள்ளார், இதற்கு காரணம் அவரின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை என கூறப்படுகிறது, மேலும் அதிமுக பாஜக கூட்டணி இழுபறியில் அவருக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது. இப்படி அதிமுக திமுக என இரு தரப்பினரும் 2021 இல் ஆட்சி அமைத்து விடுவோம் என்ற கனவில் இருக்கின்றனர்.
ஆனால் அரசியல் வல்லுனர்களின் கருத்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, அதிமுக திமுக என இரு கட்சிகளுமே அடுத்து 2021 இல் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறி வருகின்றனர். அதிமுக-பாஜக கூட்டணி இழுபறி நீடித்து வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பது பாஜகவுக்கு தெரியும் என கூறுகின்றனர், அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் யார் முதல்வர் என மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், பாஜக தரப்பு தேசிய பாஜக தலைமை தான் கூட்டணியை முடிவு செய்யும் என்கிறது, எடப்பாடி தரப்பு அப்படி எல்லாம் முடியாது என்கின்றது, இதில் ஓபிஎஸ் தரப்பு வேடிக்கை மட்டும் பார்த்து வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவுக்கு கல்தா கொடுத்தது போன்று பாஜகவுக்கும் கல்தா கொடுக்க நினைப்பதாக கூறப்படுகிறது, ஆனால் பாஜகவிடம் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தப்பமுடியாது என கூறப்படுகிறது, ஆகையால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருந்து வரும் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தனது தர்மயுத்தம் 2.0வை தொடங்குவார் என்றும், அதனால் மீண்டும் அதிமுகவில் மோதல் உச்சகட்டத்தை அடைந்து இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக, ரஜினிகாந்த், பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து வரும் 2021 தேர்தலை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக அமையும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கியதும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவும் என கூறப்படும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையிலும் பெரும் பூகம்பம் வெடிக்க காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.