சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்புப் பெற்றுள்ள ஸ்கிவிட் கேம்ஸ் தொடரை பரப்பியதற்காக வடகொரியாவில் ஒருவர் மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளார். அரசியல் காரணங்களுக்காக வடகொரியாவும் தென்கொரியாவும் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் இருந்து வருகின்றன.
வட கொரியா பல நாடுகளோடு எந்தவிதமான தொடர்புகளும் வைத்துக் கொள்ளாமல் உள்ளது. கொரோனா தங்கள் நாட்டுக்கு பரவிவிடும் என்பதால் இப்போது விமான நிலையங்களையும் மூடியுள்ளது. இந்நிலையில் தென் கொரியாவில் உருவாகி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் 13 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ள ஸ்கிவிட் கேம்ஸ் எனும் தொடரை ஒருவர் வட கொரியாவில் பென் டிரைவில் ஏற்றி விற்பனை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு துப்பாக்கி சூடு மூலமாக தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த தொடரை வாங்கிப் பார்த்தவர்களுக்கும் 5 ஆண்டுகள் சிறை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தியாவை ரேடியோ பிரி எனும் ஆசிய நாடுகளுக்கான தனியார் ஊடகம் வெளியிட்டுள்ளது.