தயார் நிலையில் பிரம்மோஸ் ஏவுகணை… கண் இமைக்கும் நேரத்தில் பாக்கிஸ்தான் காலி…

0
Follow on Google News

இந்தியா பாகிஸ்தான் போர் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் உள்ளே புகுந்து எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இந்தியா தாக்க தயாராக இருக்கிறது. இதற்காக பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா பயன்படுத்த தயார் நிலையில் வைத்துள்ளது. பிரம்மோஸ் தரை அல்லது கடலுக்கு அருகில் பறக்கிறது. அதனால் ரேடாரில் கண்டறிவது கடினம். அதைக் கண்டுபிடிக்கும் நேரத்திற்கு முன்பே இந்த ஏவுகணை இலக்கை தாக்கி விடும்.

நிலம், கடல் அல்லது ஆகாயத்தில் இருந்து ஏவ முடியும் என்பதால், இந்த ஏவுகணை எங்கிருந்து வரும் என்பதை பாகிஸ்தானால் எளிதில் யூகிக்க முடியாது.மற்ற ஏவுகணைகளை இடைமறித்து எதிரி நாடுகளால் அழிக்க முடியும். ஆனால் இந்தியா பிரம்மோஸ் ஏவுகணையை மட்டும் தடுத்து நிறுத்த முடியாது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தி வைத்தது பிரம்மாஸ் ஏவுகணை. பிரம்மோஸ் ஏவுகணையின் ஆரம்ப தூரம் 290 கிலோமீட்டர். ஆனால் அதை 500 கிலோமீட்டர் வரை நீட்டிக்க முடியும்.

தற்பொழுது இந்தியா கைவசம் இருக்கும் பிரம்மோஸ் ஏவுகணை 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை அழிக்கும் திறன் கொண்டது. இது இந்திய ராணுவம், விமானப்படைக்காக சிறப்பாக உருவாக்கப்பட்டது.மேலும் 1500 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் ஏவுகணையின் ஹைப்பர்சோனிக் பதிப்பை உருவாக்குவதில் இந்தியா மும்முரமாக உள்ளது

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுக்கான தூரம்

அமிர்தசரஸில் இருந்து லாகூர் 55 கி.மீ.

பதான்கோட்டில் இருந்து லாகூருக்கு 148 கி.மீ தூரம்.

அமிர்தசரஸிலில் இந்து இஸ்லாமாபாத் 287 கி.மீ.

பதான்கோட்டில் இருந்து இஸ்லாமாபாத் வரையிலான தூரம் 291 கி.மீ.

அமிர்தசரஸ் முதல் ராவல்பிண்டி வரை 276 கி.மீ.

பதான்கோட்டில் இருந்து ராவல்பிண்டி 285 கி.மீ.

பூஜிலிருந்து கராச்சி வரையிலான தூரம் 325 கி.மீ.

அந்த வகையில் இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தான் முக்கிய நகரம் அதிகபட்சம் 325 கிலோ மீட்டர் சுற்றளவு மட்டுமே உள்ளது. அந்த வகையில் லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி போன்ற நகரங்களை கண் இமைக்கும் நேரத்தில் இடிபாடுகளாக மாற்றும் திறன் கொண்ட துல்லியமான ஏவுகணைகள் இந்தியாவிடம் உள்ளன. இதனால்தான் இந்தியாவின் அணுகுமுறையால் பாகிஸ்தான் பயத்தில் நடுங்குகிறது.

பிரம்மோஸ் மாக் 2.8 முதல் 3 வேகத்தில் பயணிக்க கூடியது, அதாவது ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு இதன் வேகம் அதிகம், இந்த வேகம் காரணமாக எதிரி நாடுகள் அதை சரியான நேரத்தில் கண்டறிந்து நிறுத்துவது மிகவும் கடினம். தாக்கப்பட்ட வேண்டிய இலக்கு நகர்ந்தாலும், பிரம்மோஸ் அதன் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும். இது எதிரி கப்பல்கள், பதுங்கு குழிகள் மற்றும் இராணுவ தளங்கள் உட்பட தரை மற்றும் கடல் இலக்குகளை எளிதாக தாக்க முடியும்.குறிப்பாக பாகிஸ்தான் ராணுவ கட்டளை மையங்கள், விமான தளங்கள், ஏவுகணை தளங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை துல்லியமாக குறிவைக்க உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here