பஞ்சாப் : பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் அமைந்துள்ள காவல்துறையின் ஒருபிரிவான உளவுத்துறை தலைமையகத்தில் கடந்த திங்கட்கிழமை ராக்கெட் ராஞ்சர் மூலம் குண்டு வீசப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர விசாரணையில் போலீசார் இறங்கினர். முதற்கட்ட விசாரணையில் காலிஸ்தானிகளுக்கு தொடர்பிருக்கலாம் என கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக பஞ்சாப்பில் 6 பேர் வரை கைதுசெய்யப்பட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநில டிஜிபி விகே பாவ்ரா “பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட தாக்குதலில் காலிஸ்தானி பயங்கரவாத குழுவான பாபர் கல்சா இன்டர்நெஷனல் மற்றும் உள்ளூர் குண்டர்கள் இந்த சதிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
தர்ன் தரனில் வசிக்கும் கூட்டாளிகளான நிஷான் சிங் ஆகியோரின் உதவியுடன் லாண்டா இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் காவல்துறையினர் கூற்றுப்படி நிதாஸ் சிங் தனது வீடு மற்றும் தனக்கு நெருங்கியவர்கள் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களை தங்க வைத்துள்ளார். நிஷான் சிங் தாக்குதலுக்கு தேவையான பொருட்களை சேகரித்து கொடுத்துள்ளார்.
பல்ஜிந்தர்சிங் என்பவர் ஏகே 47 துப்பாக்கியை சதத்சிங்கிடம் கொடுத்துள்ளார். சதத்சிங் மற்றும் இரண்டு தாக்குதல்காரர்கள் மே 7 அன்று தர்தரனில் இருந்து மொஹாலிக்கு வந்து உளவுத்துறை தலைமையகத்தை தாக்கியுள்ளனர்” என போலீசார் தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தானை சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்விந்தர்சிங்கின் நெருங்கிய கூட்டாளியும் இதில் சிக்கியுள்ளார்.
ஹர்விந்தர்சிங் கூட்டாளி லக்பிர் சிங் லாண்டா கனடாவை சேர்ந்தவர். இவர்தான் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார் என்பதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது என்பதை டிஜிபி பாவ்ரா செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.