பொது இடத்தில் தனுஷை அசிங்கப்படுத்திய நயன்தாரா… தனுஷ்க்கு ஏற்பட்ட உச்சகட்ட அவமானம்..

0
Follow on Google News

இயக்குனர் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர். இவரு இட்லி கடை படம் போன்ற சில படங்களை தயாரித்துள்ளார். இவரின் திருமண விழாவில் தனுஷ் நயன்தாரா இருவரும் கலந்து கொண்டு அருகே அருகே உட்கார்ந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்க்காதபடி புகைப்படம் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு பின்பு தனுஷை அசிங்க படுத்த நயன்தாராவின் பக்கா மாஸ்டர் பிளான் என்ன என்பது தற்பொழுது வெளியாகி உள்ளது.

இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் தனுஷை வைத்தும் ஒரு படம் எடுத்து வருகிறார், ஒரு காலத்தில் நடிகர் தனுஷின் நெருங்கிய நண்பராகவும் இருந்து வந்தவர் ஆகாஷ் பாஸ்கர். எப்படி தனுசுக்கு ஆகாஷ் பாஸ்கர் நண்பரோ அதே போன்று விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கும் நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார் ஆகாஷ் பாஸ்கர். அதாவது ஆகாஷ் பாஸ்கர் இதற்கு முன்பு விக்னேஷ் இவனுடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

தற்பொழுது அதர்வாவை வைத்து ஒரு படமும் இயக்கி வருகிறார். அந்த வகையில் தனுஷ் , நயன்தாரா விக்னேஷ் சிவன் என இரண்டு தரப்பு இடமே நட்புடன் பழகி வந்தார் ஆகாஷ் பாஸ்கர். அந்த வகையில் தன்னுடைய திருமண விழாவிற்கு இருவரையும் அழைத்திருக்கிறார் ஆகாஷ் பாஸ்கர். ஆனால் நயன்தாரா வருவதற்கு முன்பே தனுஷ் வந்து அவருடைய இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

இதன் பின்பு தான் நயன்தாரா அந்த திருமண நிகழ்விற்கு வந்திருக்கிறார். தனுஷ் அமர்ந்திருக்கும் சோபாவில் இருந்து ஒரு நான்கு சோபா தள்ளி தான் நயன்தாராவின் இருக்கை போடப்பட்டிருந்தது. நயன்தாரா உள்ளே என்ட்ரி கொடுத்த உடனே அங்கே வரவேற்பதற்காக நியமிக்கப்பட்ட நபர்கள் நயன்தாரா அமர இருக்கும் சோபாவை கை காட்டினார்கள், ஆனால் அவர்கள் கைகாட்டிய சோபாவில் அமரவில்லை நயன்தாரா.

அங்கே சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியிடம் பேசுவது போன்று பேசி அங்கிருந்தவர்களிடம் எனக்கு இந்த இடத்தில் இடம் ஒதுக்குங்கள் என்று தனுஷ் பக்கத்திலே தான் உட்காருவதற்கு இடம் ஒதுக்க சொல்லி இருக்கிறார் நயன்தாரா. அதற்கு அவர்கள் இல்ல மேடம் உங்களுடைய இருக்கை அங்கே ஒதுக்கி இருக்கு என்று நயன்தாராவுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை காட்ட, அதற்கு நயன்தாரா நோ நோ எனக்கு இந்த இடத்தில தான் வேண்டும் என்று தனுஷ் பக்கத்தில் கைகாட்டி இருக்கிறார் நயன்தாரா.

உடனே நயன்தாரா விருப்பப்படியே அவர் காட்டி இடத்தில் அவருக்கு இடம் போட பட்டு அதன் பின்பு அங்கே தனுஷ் பக்கத்திலே நயன்தாரா அமர்ந்து எப்படி படையப்பா படத்தில் ரஜினிகாந்த் முன்பு கால் மேல் கால் போட்டு நீலாம்பரி அமருவாரோ, அதே போன்று காலை தூக்கி கால் மேல் கால் போட்டு தனுசை நோக்கி காலை திருப்பி கெத்தா நயன்தாரா அமர்ந்த போட்டோ தான் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

மேலும் நயன்தாரா தனுஷ் பக்கத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த போட்டோவை எடுத்ததும் கூட நயன்தாராவுடன் வந்த அவருடைய குழுவினர் தான் என்றும், அந்த வகையில் கல்யாண வீடு சார்பாக எடுக்கப்பட்ட புகைப்படம் இது இல்லை. நயன்தாரா கூட வந்தவர்களே இந்த புகைப்படத்தை எடுத்து வெளியே வைரல் ஆக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு கல்யாண வீடு என்று கூட பாராமல், தனுஷை அவமான படுத்த வேண்டும் என்பதற்காகவே ,,தனுஷ் பக்கத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து அதை புகைப்படமாக எடுத்து வைரல் செய்து நயன்தாரா கெத்து காட்டி வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here