ஆரம்ப கட்டத்தில் இருக்கும் திறமையான இயக்குனர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அங்கீரகாரம் வழங்கி வருகின்றவர் நடிகர் கார்த்திக், அந்த வகையில், அட்டகத்தி படத்தை இயக்கிய பா.ரஞ்சித்துக்கு மெட்ராஸ் படம் மூலம் வாய்ப்பு கொடுத்து அவரை அடுத்து ரஜினிகாந்த் படத்தை இயக்கும் அளவுக்கு வளர்த்து விட்டவர் கார்த்திக்கு, அதே போன்று சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய ஹெச்.வினோத்தை தீரன் அதிகாரம் ஓன்று படத்தில் வாய்ப்பு கொடுத்தார் கார்த்திக்.
இந்த படம் கொடுத்த வெற்றி தொடர்ந்து அஜித்தை வைத்து மூன்று படங்கள் இயக்கும் அளவுக்கு மிக பெரிய இயக்குனரானார் ஹெச்.வினோத். அதே போன்று மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு கைதி படத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருப்பதற்கு முக்கிய காரணம் நடிகர் கார்த்திக்.
மேலும் ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், பா.ரஞ்சித் ஆகியோர் இயக்கத்தில் கார்த்திக் நடித்த அணைத்து படங்களும் அவரின் உறவினர்கள் தயாரித்த படம், அந்த வகையில் ஆரம்ப கட்ட இயக்குனர்களை நம்பி பெரிய பட்ஜெட் படங்களை இயக்க தயாரிப்பளர்கள் பலர் முன் வாராத நிலையில், தன்னுடைய உறவினர்கள் மூலம் அந்த படங்களை தயாரித்து ஆரம்ப கட்ட இயக்குனர்களின் கனவுகளை நனவாக்கியவர் கார்த்திக்.
இந்த நிலையில் மெட்ராஸ் படத்தை முடித்துவிட்டு மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க கதை கேட்டு அந்த படத்திற்கான வேலை தொடங்கப்பட்ட போது, மெட்ராஸ் பட வெற்றியை பார்த்து, ரஜினிகாந்திடம் இருந்து பா.ரஞ்சித்துக்கு அழைப்பு வர, கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் பா. ரஞ்சித், இருந்தும் ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்பதால் பா.ரஞ்சித்திடம் பரவாயில்லை மிக பெரிய வாய்ப்பு ரஜினி சார் படத்தை முடித்துவிட்டு வாங்க என அனுப்பி வைத்துள்ளார் கார்த்திக்.
ஆனால் பா.ரஞ்சித் அடுத்தடுத்து கபாலி, காலா என தொடர்ந்து ரஜினியை வைத்து இயக்க, கார்த்திக் – பா ரஞ்சித் படம் காலதாமதம் காரணமாக எடுக்க முடியமால் போனது. இதே போன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படத்தில் நடிக்க கதை கேட்ட கார்த்திக் , தற்பொழுது லோகேஷ் இயக்கம் லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்து கைதி 2 படத்தை தொடங்கலாம் என லோகேஷ் மற்றும் கார்த்திக் இருவரும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் தற்போது சினிமாவில் மிக பெரிய உயரத்தில் இருப்பதற்கு முக்கிய காரணமே, கைதி படத்தில் கார்த்திக் கொடுத்த வாய்ப்பு தான் என்பதை நன்கு உணர்ந்த லோகேஷ் கனகராஜ், அதற்கு நன்றி கடனாக மீண்டும் கார்த்திக் உடன் சேர்ந்து ஒரு படம் பண்ணுவதற்கு விருப்பத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து லோகேஷ் கனகராஜுக்கு அடுத்த பட வாய்ப்பு வந்துள்ளது.
லோகேஷ் தனக்கு அடுத்தடுத்து கமிட்மென்ட் இருப்பதாக தெரிவித்தாலும், ரஜினி விடுவதாக இல்லை, இது தான் எனக்கு கடைசி படம் நீங்க தான் அந்த படத்தை இயக்க வேண்டும் என மண்டையை கழுவி லோகேஷ் கனகராஜை சம்மதிக்க வைத்து, தற்பொழுது லியோ படத்தை லோகேஷ் முடித்துவிட்டு அடுத்து, ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வேளைகளில் இறங்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் கார்த்திக் படங்களுக்கு ஒவ்வொரு முறையும் தடையாக இருக்கும் ரஜினிகாந்தின் செயல், ஒரு பெரிய மனுஷன் செய்கின்ற வேலையா இது.? அவருக்கே தெரிய வேண்டாமா .? என்கிற விமர்சனம் எழுந்துள்ள நிலையில், ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவிய கார்த்திக் எங்க.? ஓடுகிற குதிரையான முன்னனி இயக்குனர்கள் மீது சவாரி செய்யும் ரஜினி எங்க.? இதில் யார் ரியல் சூப்பர் ஸ்டார் என்கிற விவாதமும் சினிமா வட்டாரத்தில் நடந்து வருவதை பார்க்க முடிகிறது.