ஒரே நடிகைக்கு போட்டி போடும் தனுஷ் – சிம்பு… கடைசியில் அசிக்கப்பட்டது சிம்பு தான்..

0
Follow on Google News

மாநாடு படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் படு தோல்வியை சந்தித்தாலும், இன்னும் மாநாடு கொடுத்த வெற்றியின் மிதப்பிலேயே சிம்பு இருந்து வருகிறார். இந்த நிலையில் பத்து தல படத்திற்கு பின்பு நடிகர் கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார் நடிகர் சிம்பு.

இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட் என கூறப்படும் நிலையில், சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம் தான் மிகப்பெரிய பட்ஜெட் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு தனக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தான் வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்க, பட குழுவினரும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் சிம்பு ஜோடியாக நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் சிம்புவுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியானது, இந்த நிலையில் நடிகர் தனுஷ் ஏற்கனவே இந்தியில் ரஞ்சனா போன்ற வெற்றி படங்களில் நடித்தவர். தற்பொழுது மீண்டும் இந்தியில் தேரே இஸ்க் மேன் என்கின்ற இந்தி படத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷ் நடிப்பது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உறுதியும் செய்துள்ளார் தனுஷ்.

இந்த நிலையில் தேரே இஸ்க் மேன் படத்தில் தனுஷ் ஜோடியாக தீபிகா படுகோன் நடிகருபதாக தகவல் வழியாய் உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை தீபிகா படுகோனுடன் நடந்து வருவதாகவும், தீபிகா படுகோனும் கிட்டத்தட்ட தனுசுடன் நடிப்பதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முன்பு சிம்பு உடன் நடிக்க தீபிகா படுகோனை முயற்சி செய்த போது மறுத்தவர் தனுஷ் என்றது ஓகே சொன்னது குறித்து ஹிந்தி சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் பல தகவல் வெளியகியுள்ளது.

தனுஷ் ஏற்கனவே சில ஹிந்தி படங்களில் நடித்து வெற்றியும் பெற்றவர், அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் பிரபலமாக அறியப்பட்டவர் தனுஷ். மேலும் அசூரன் போன்ற படங்களில் தனுஷின் நடிப்பு இந்திய அளவில் பேசப்பட்டது, தனுஷ் நடிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவின் உயரிய விருதான தேசிய விருது வழங்கி கௌரவ படுத்த பட்டார்.

மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பபிரபலமானது. இப்படி நடிகர் தனுஷ் இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஒரு நடிகராக இருந்து வருகிறார். ஆனால் நடிகர் சிம்பு இன்னும் தமிழ் சினிமாவை தாண்டி அவரால் செல்ல முடியவில்லை, குறிப்பாக பிற மொழி சினிமா துறையினர் சிம்பு என்றால் யார் என்று கேட்கும் அளவில் தான் சிம்புவின் நிலைமை உள்ளது.

சிம்புவின் இந்த நிலைமை தான் அவருடன் ஜோடி சேர்வதற்கு தீபிகா படுகோன் மறுத்ததாகவும், அதே நேரத்தில் தனுஷ் ஏற்கனவே ஹிந்தி சினிமாவில் நடித்து வெற்றி பெற்று பாலிவுட் வட்டாரத்தில் பிரபலமாக அறியப்படுகின்றவர் என்பதால் உடனே தனுஷ் உடன் நடிக்க தீபிகா ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தனுஷ் உடன் நடிக்க தீபிகா படுகோனிடம் சம்பள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், தீபிகா படுகோன் கேட்கும் சம்பளத்தை பட தயாரிப்பு நிறுவனம் கொடுக்க முன் வந்தால் உடனே தீபிகா படுகோன் நடிப்பது உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் தனுஷ் சினிமாவில் இருக்கும் உயரத்திற்கும் சிம்பு இருக்கும் உயரத்திற்கும் மிகப்பெரிய தூரம் என்றும், தனுஷ் இருக்கும் உயரத்தை சிம்பு அடைய வேண்டும் என்றால் இன்னும் பல முயற்சிகளை செய்ய வேண்டும், அந்த வகையில் தனுசுக்கு போட்டி சிம்பு என்பதெல்லாம் ஒரு நகைச்சுவை என்கின்றனர் சினிமா விமர்சனங்கள்.