கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை கொடுப்பவர்கள் இடம் ஒரு ரூபாய் மட்டுமே பிச்சையாக பெற்று வந்த பிரபல பிச்சைக்காரர் சாலை விபத்தில் பலி. இவருடைய இறுதி ஊர்வலத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய ஹுச்சா பாஸ்யா என்ற பசவா (45) பிச்சைக்காரர், ஹுவினா ஹடகாலி என்ற பகுதியில் பிச்சை எடுத்து வருகிறார்.
இவர் அந்த நகர பகுதியில் பிரபலமான பிச்சைக்காரர். பேருந்து நிலையத்தின் அருகில் ஒரு கொட்டகையில் தங்கி பிச்சை எடுத்து வந்துள்ளார். இவருக்கு யாராவது பிச்சை போட்டால் அதில் ஒரு ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு மீதப் பணத்தை திருப்பி கொடுத்து விடுவாரம். சிலர் கட்டாயமாக கொடுத்தாலும் அதை வாங்க மறுத்து விடுவாராம்.
இவருக்கு யாரு ஒரு ரூபாயை கொடுத்தாலும் அவர்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வதால் இவர் அந்த பகுதியில் மிகவும் பிரபலமான பிச்சைக்காரராக இருந்துள்ளார். இதற்கு சிகிச்சை அளிப்பதால் பல நன்மைகள் நடைபெறுவதாக அந்த பகுதி நகர வாசிகள் கூறுகின்றனர். அதனால் தினந்தோறும் அவருக்கு பிச்சை அளிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளனர் அவரும் ஒரு ரூபாயை பிச்சையாக வாங்குவதால் ஒரு ரூபாய் பிச்சைக்காரன் என்று பெயர் பெற்று பிரபலமானார்.
சில தினங்கள் முன்பு சாலை விபத்தில் சிக்கியவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரு பிச்சைக்காரர் இறந்ததால் யாரும் அருகில் கூட செல்ல மாட்டார்கள். ஆனால் இவரின் இறப்புக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், கடைக்காரர்கள் என 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அவருக்கு இறுதி ஊர்வலத்தை நடத்தியுள்ளனர். அவரது இறப்பு அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்துயுள்ளது.