ஐக்கிய அரபு நாடுகளில் 30 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்ககான மக்கள் தொகையில் இந்தியர்களே முதலிடம் வகிக்கின்றனர். இந்துக்களுக்காக அபுதாபி அருகே பிரம்மாண்ட கோயில் ஒன்றை கட்டிவருகின்றனர். தற்போது 2-வது துபாய் ஜெபல் அலி பகுதியில் புதிய கோயில் ஒன்றை பிரம்மாண்டமாக கட்டி வருகின்றனர்.
இதன் பணிகள் தற்போது 50 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள பணிகள் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவுபெற்றுவிடும் என்று கூறப்படுகிறது. வர்த்தக நகராக கருதப்படும் கட்டப்படும் இந்த கோயில் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சுமார் ரூ.149 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையின்போது இது திறக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த கோயிலின் அறங்காவலராக ராஜு ஷரோப் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறும்போது, கோயிலுக்கான அடிக்கல் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே நாட்டப்பட்டு விட்டது. சீக்கிய குரு நாகக் தர்பார் அருகே அமைய உள்ள இந்த கோயில் பாரம்பரிய முறையில் மிக அழகிய வகையில் கட்டப்பட்டு வருகிறது என்றார்.