கோவையில் தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார், பாதிக்கப்பட்ட மாணவி ஏற்கனவே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளியின் முதல்வரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சமீப காலமாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும். இது போன்று செயல் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இது குறித்து மதுரையில் உள்ள அண்ணா கல்லூரியின் முதல்வர் அண்ணாதுரை ஸ்ரீ அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நிரந்தர தீர்வு காணும் வகையில் அவர் தெரிவித்ததாவது.
பள்ளி கல்லூரிகளில் பாத்ரூம் தவிர வகுப்பறை முதல் அணைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயமாக்க வேண்டும்…பெண்கள் குட்டை பாவாடை போடுவதை தடை செய்து, சுடிதார் மட்டுமே அணிவதை அனைத்து பள்ளிகளில் கட்டாயம் செய்ய வேண்டும், பள்ளிகளில் செய்முறை(practical) படத்தின் மதிப்பெண் பெண் ஆசிரியர்கள் மட்டுமே வழங்க வேண்டும். செய்முறை(practical) மதிப்பெண்ணை குறைத்துவிடுவேன்னு மிரட்டி தான் நிறைய தவறுகள் நடக்கிறது.
முடிந்தளவு பெண் மாணவிகளுக்கு, பெண் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்க அனுமதிக்க வேண்டும். செல்லம் கொடுத்து பெற்றோர்களே தங்கள் குழந்தைகள் தடம் மாற காரணமாக இருக்கின்றனர். எவ்வளவுக்கு எவ்வளவு கடிவாளம் போட்டு கடுமையாக நடக்க வேண்டுமோ நடங்கள். தயவு செய்து உங்கள் குழந்தைகளை அவர்கள் போக்கில் விடாதீர்கள். வீட்டில் கண்டிப்பாக படிக்க/தூங்க என தயவுசெய்து எதுக்குமே தனியறை கொடுக்காதீர்கள்.
அதுதான் அவர்கள் தடம் மாற முதல் படி. தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களின் பாஸ்வெர் கண்டிப்பாக பெற்றோர் கட்டுப்பாட்டில் வைத்து, தொடர்ச்சியாக கண்காணியுங்கள். முக்கியமாக வயதில் மூத்தவர், உறவினர், மற்றும் பக்கத்து வீட்டில் இருப்பவர் என யாரையும் நம்பி நம் பெண்/ஆண் குழந்தைகளை பழக விடாதீர்கள். மடியில் உட்காரவைத்தோ, வண்டியில் அனுப்பிவிட்டோ, தொட்டுப் பேசவோ அனுமதிக்காதீர்கள்.
அப்பா,அம்மா தவிர யாரும் தொடக்கூடாதுன்னு சொல்லி வளருங்கள். Bad touch, good touch னு எதும்வும் கிடையாது.. Touch செய்தாலே அது bad touch தான்னு சொல்லி வளர்ப்போம். நம் குழந்தைகளின் எதிர்காலம் நம் கைகளில் தான் உள்ளது. என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அண்ணா கல்லூரி முதல்வர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.