பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு பள்ளி முதல்வர் உடந்தை …சோகத்தில் ஆழ்த்திய மாணவி மரணம்..

0
Follow on Google News

கோவை ஆர்எஸ் புரத்தில் இயங்கிவரும் சின்மயா மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த மாணவி ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அந்த பள்ளி ஆசிரியர் கைது செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

மிதுன் சக்கரவர்த்தி என்ற இந்த ஆசிரியர் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது மாணவிக்கு உதவி செய்வது போல் நட்பாக பழகி வந்துள்ளார். பின்பு தான் இவரின் சுயரூபம் மாணவிக்கு தெரியவந்துள்ளது. ஆனாலும் அந்த ஆசிரியர் பலமுறை மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததால் மனைவி கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளானார்.

ஆசிரியர் குறித்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் இடம் புகார் கொடுத்தபோது, தான் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி விட்டு இந்த விஷயம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த இயற்பியல் ஆசிரியரின் மனைவியும் அதே பள்ளியில்தான் ஆசிரியராக உள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்தப் பள்ளியில் படிக்க முடியாமல் தாய் தந்தையிடம் வேறு பள்ளியில் சேர்க்குமாறு வற்புறுத்தி கூறியுள்ளார். இதனால் அவர்கள் டிசியை வாங்கிக்கொண்டு வேறு பள்ளியில் சேர்த்தனர். இரு பள்ளிக்குச் சென்றாலும் நடந்ததை மறக்க முடியாமல் மாணவி கடுமையான மன உளைச்சலில் இருந்ததால் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டத்தில் குதித்ததால் தலைமறைவாக இருந்த இயற்பியல் ஆசிரியரை உடனடியாக கைது செய்தனர்.

அந்த மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அந்த இயற்பியல் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை போலீசார் தேடிவந்தனர் தலைமறைவாக இருந்த அவரை பெங்களூரில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். மேலும் மாணவி தற்கொலை செய்துகொண்ட இடத்தில் ஒரு துண்டுச் சீட்டில் ஆசிரியர் மற்றும் மேலும் இரண்டு பேரைக் குறிப்பிட்டு அவர்களை விடக்கூடாது என்று எழுதியுள்ளார். மன உளைச்சலில் இருந்த போது மாணவி ஆசிரியரிடம் பேசிய ஆடியோ ஒன்று ஆதாரமாக தற்போது வைரலாகி வருகிறது. மேலும் போலீசார் இந்த வழக்கு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.