உங்களை மீடியாவில் கிழிக்கிறேன்…. பெண் போலீசாரை மிரட்டிய சவுக்கு சவுக்கு சங்கர் பெண் போலீசாரால் தாக்கப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டதா.?

0
Follow on Google News

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் மீது, தொடர்ச்சியாக தமிழக முழுவதும் பல இடங்களில் காவல்துறை பெண் அதிகாரிகளும் பெண் காவலர்களும் மீது புகார் கொடுத்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில்.

சவுக்கு சங்கர் மீது திருச்சி முசிறி டி.எஸ்.பி. யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவல்துறை அதிகாரிகள் கோவைக்குச் சென்று, அங்கே சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை காவல் துறை வாகனத்தில் திருச்சி அழைத்து வந்தனர். காவல் துறை வாகனத்தில் சவுக்கு சங்கர் பின் இருக்கையில் அமர்ந்திருக்க முழுக்க முழுக்க அந்த வாகனத்தில் பெண் போலீசார் பாதுக்காப்பில் கோவையில் இருந்து சவுக்கு சங்கர் திருச்சி அழைத்து வரப்பட்ட புகைப்படம் வைரலாகினது.

இதனை தொடர்ந்து பெண் காவலர்கள் மீது அவதூறு பரப்பிய சவுக்கு சங்கரை பெண் காவலர் மூலம் பாதுக்காப்பாக அழைத்து வர செய்துள்ளது சவுக்கு சங்கருக்கு சரியான பாடமாக அமைத்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கோவையில் இருந்து திருச்சி மகளிர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பாக சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் அழைத்து வந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரிடம் நீதிபதி முன்பு நடந்த விசாரணையில், சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழங்கறிஞர், ஏற்கனவே நீதிமன்ற காவலில் இருக்கும் போது சவுக்கு சங்கர் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மீண்டும், மீண்டும் காவல்துறை விசாரணைக்கு எடுக்கும் போது அவர் கை எலும்பு முறிவு ஏற்பட்டது போல் நாளை அவர் கால் எலும்பும் முறியும் சூழல் ஏற்படும்.

ஒரு விவகாரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் வழக்கு போடுவதை தவிர்க்க வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.இதற்கு அரசு தரப்பில், காவல்துறை சார்பில் விசாரணைக்கு எடுத்தால் மட்டுமே எதன் அடிப்படையில் அவர் பேசினார், அவரிடம் என்ன முகாந்திரம் உள்ளது என்பது குறித்தான விவரங்கள் வெளியே கொண்டு வர முடியும் என வாதிட்டனர்.

இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர், பெண் காவலர்கள் நேம் பேட்ச் இல்லாமல் அழைத்து வந்ததும் வேனில் அவரை அடித்ததாக சொல்லப்பட்ட புகாரில் அழைத்து வந்த காவலர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சவுக்கு சங்கர் வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது திடீரென உள்ளே வந்த பெண் காவலர்கள் இப்ப கூட வேனில் வரும்போது உங்கள் அனைவரையும் மீடியாவில் கிழிக்கிறேன் என சவுக்கு சங்கர் மிரட்டியதாக குற்றம் சாட்டினர்.

மற்றொரு பெண் காவலர் தன் கல்யாணம் ஆகாத நபராக பணியில் இருக்கிறேன். நான் அவருடன் வேனில் பயணிக்கும்போது, எனது பெயர் மற்றும் எனது போன் நம்பர் கேட்டார். நான் வழங்கி இருந்தால் எனது பெயருக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவார் என குற்றம் சாட்டினர். இந்நிலையில் கோவையில் இருந்து அழைத்து வரப்பட்டபோது, பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாகவும் அதனை காணொளியாகப் பதிவு செய்து காவல்துறையை சேர்ந்த வாட்சப் குழுக்களுக்கு அனுப்பியதாகவும் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டிய நிலையில், பெண் காவலர்களின் விரல் கூட சவுக்கு சங்கர் மீது படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கரின் கையை ஸ்கேன் செய்து வர நீதிபதி ஜெயபிரதா அறிவுறுத்தினார். இந்நிலையில் சவுக்குசங்கர் நீதிமன்றத்தை விட்டு காவல்துறையினர் அழைத்து வந்தபோது நீதிமன்ற வாசலில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்குமாறு மற்றும் செருப்புடன் சவுக்குசங்கர் எதிர்த்து கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.