பெண் தோழிக்கு 100 பவுன் நகை… கோடி ரூபாயில் வீடு… யார் அந்த சவுக்கு சங்கரின் பெண் தோழி…

0
Follow on Google News

பெண் காவலரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்துள்ள சவுக்கு சங்கர் மீது, அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகிறது, இந்நிலையில் பெண் காவலர்களை அவதூறாக பேசி கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு பெண் காவலர் பாதுகாப்பில் அழைத்து வரப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தன்னை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் வழியில் பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் குற்றசாட்டு வைத்துள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கர் குறித்து சமீபத்தில் அவருடைய உதவையாளராக இருந்த பிரதீப், சவுக்கு சங்கருக்கு எத்தனை சொகுசு கார் உள்ளது, எங்கெல்லாம் சொத்து உள்ளது என பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்பொழுது சவுக்கு சங்கர் மனைவி நிலவு தேன்மொழி பல பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் ஊழலுக்கு எதிராக அடையாளம் காட்டிக்கொண்ட சங்கரின் இன்றைய சொத்து மதிப்பு என்ன? என கேள்வி எழுப்பியுள்ள நிலவுதேன்மொழி, எனக்கு தெரிந்த சங்கருக்கு மாத சம்பளம் 35 ஆயிரம். தினமணில வந்த மாத 10,000₹ சேர்த்து என்னோட டெலிவரி செலவுக்கு வைச்சது. மாலதிக்கு பத்துகோடி மதிப்புள்ள சொத்து வாங்கிக்கொடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான், எனது மகனிற்கு 2000₹ வழங்கமாட்டேன் என நீதிமன்றத்தில் நின்றான்.

திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம் ஆன மாதிரி, இன்னைக்கு சங்கரோட கார் மதிப்பு மட்டுமே பல இலட்சங்கள். அரசியல்வாதிகளின் ஏகபோக வாழ்விற்கு ஆதரவாக, மக்களுக்கு எதிராக நிற்கும் சங்கரின் தனிப்பட்ட வாழ்வு குறித்து எனக்கு கவலையில்லை. அந்த தனிப்பட்ட வாழ்க்கையே பினாமியாக இருக்கும்பட்சத்தில், அதை வெளிக்கொணருவதில் தவறில்லை.

தூத்துக்குடி கலவரத்திலிருந்து, ஸ்ரீமதி இறப்பு வரை அவன் ஆதரவுக்கரம் நீட்டியது மக்களுக்கு இல்லை. மணல் மாஃபியாவிலிருந்து, காசா கிராண்ட், ஜிஸ்கொயர் போன்ற நிறுவனங்கள் வரை ஆரம்பித்து பின் அமைதிகாத்த அவனின் கள்ளமெளனம் கேள்விக்குரியது. நான்கு மாத கைக்குழந்தையுடன் நான் எனது பெற்றோருடன் இருந்த பொழுது, என்னைக் குறித்து சவுக்கில் ஆபாசமாக எழுதுவேன் என மிரட்டியதோடு, அப்பொழுது வி.ஏ.ஓ வேலை செய்த எனது அப்பாவை வேலையை விட்டு தூக்குவதாகவும் மிரட்டினான் அவன்.

எவ்வித பின்னணியுமின்றி, அவனது மிரட்டல்களை ச்சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என துப்பிச் சென்றேன். அப்படியான மிரட்டல்களே இன்று அவனுக்கு பல மடங்கு அன்பளிப்புகளுடன், கோடிகளில் புரள வைத்திருக்கிறது போலும். அரசியல் காரணங்களுக்காகவே அவன் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. ஆனால், மனித உரிமை ஆர்வலர்களுக்கு, அரசு அடக்குமுறையை தினந்தினம் அனுபவிக்கும் சாதாரண ஏழை, நடுத்தர வர்க்க மனிதர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமா? திடீரென கோடியில் புரளுபவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ள சவுக்கு சங்கரின் முன்னாள் மனைவி நிலவுமொழி.

மேலும் சாதாரண ஆங்கர் மாலதிக்கு அசையா சொத்துகள் 100 பவுன் அசையும் சொத்துகள் 1கோடி வீடு எப்படி வந்தது? மாலதியின் அக்கெளண்ட் டிரான்ஸ்சேக்‌ஷன் பழையதும், சங்கரின் நட்புக்கு பிறகான கணக்குகளையும் கணக்கில் எடுக்க வேண்டும். என சவுக்கு சங்கரின் சட்டபூர்வமான மனைவி நிலவுமொழி தெரிவித்துள்ளதை தொடர்ந்து, சவுக்கு சங்கர் வீடு நகை என வாங்கி கொடுத்த சவுக்கு சங்கரின் அந்த பெண் தோழி யார் என தெரிந்து கொள்வதில் பலரும் ஆர்வமாக சமூக வலைதளத்தில் தேடி வருவதை பார்க்க முடிகிறது.