கள்ளக்காதல் ஜோடியை அடித்தே கொலை செய்த உறவினர்கள்.! மானாமதுரையில் நடந்த பரபரப்பு.!

0
Follow on Google News

ஓடிப்போன கள்ளக்காதல் தம்பதியை அவர்களது குடும்பமே சேர்ந்து கொன்றது சிவகங்கையில் பரபரப்பானது. ராமநாதபுரம், நயினார்கோவில் மணச்சனேந்தலை பகுதியை சேர்ந்த சந்தியேந்திரனுக்கும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள களங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த வளர்மதிக்கும் கடந்த 7ஆண்டு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள், 6வயதில் மகளும் 3வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கணவரின் ஊரான மணச்சனேந்தலில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்வில், அதே பகுதியில் வசித்து வரும் வேல்ராஜுடன் வளர்மதிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. கள்ளத்தனமான காதலுக்காக குழந்தைகளை விட்டுவிட்டு வேல்ராஜீடன் வளர்மதி வீட்டை விட்டு ஓடிவிட்டார், கணவர் சந்தியேந்திரக்கு தன்னுடைய மனைவி காணாமல் போனது தெரியவர பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நயினார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தப்பியோடிய கள்ளக்காதல் ஜோடி திருச்சியில் தஞ்சமடைந்த வீடு எடுத்து வாழ்ந்து வந்ததாக தகவல் வெளிவர, சந்தியேந்திரன், அவரது தம்பி மற்றும் அவரின் மனைவி வளர்மதியின் இரண்டு அண்ணன்களுடன் திருச்சியில் வீடு எடுத்து தஞ்சமடைந்த கள்ள காதல் ஜோடியை மீட்டுவர கிளம்பினர். கடைசியில் அவர்களது வீட்டை கண்டுபிடித்து வளர்மதிக்கு புரிய வைத்து அழைத்து வர முயற்சித்தனர். ஆனால் வளர்மதியும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை,

ஆத்திரத்தில் வேல்ராஜை தாக்கிய வளர்மதியின் அண்ணன்கள். பிறகு வளர்மதியை இழுத்து வந்து சிவகங்கையில், மானாமதுரையில் அவர்களது கிராமத்தில் சிறை வைத்தனர். வளர்மதியின் இரண்டு அண்ணன்கள் தாக்கிய வேல் ராஜ் இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன் திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார் வேல்ராஜ்.

வேல்ராஜை இறந்ததை தொடர்ந்து வளர்மதியின் தம்பி மற்றும் வேல்ராஜை தாக்கியவரக்ள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து வேல் ராஜ் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு ஆத்திரத்தில் வளர்மதியை அவர் அண்ணண் மற்றும் உறவினர்களில் ஒருவர் சேர்ந்து அடித்து கொன்றனர். சம்பவ இடத்திற்கு வந்த மானாமதுரை காவல் துறை இருவர் மீது வழக்கு பதிந்துள்ளனர். விபரீத ஆசையால் தற்போது வளர்மதியின் குடும்பமே கம்பி எண்ணி வருகிறது.