ராஜீவ் கொலை குற்றவாளி பேரறிவாளன் விடுதலை..நீதி வென்றதா..? பேரறிவாளன் கூறியது என்ன..?

0
Follow on Google News

சென்னை : பலகாலமாக பரோலில் மட்டுமே வெளியில் வந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொன்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்ற பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தனது விடுதலையை அற்புதம்மாள் மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

சென்னையில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் அவரது சொந்த கிராமமான ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களை பேரறிவாளன் சந்தித்தார். அவரிடம் எதிர்கால திட்டம் என்ன என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.செய்தியாளர்களிடம் “நான் இப்போதுதான் வெளியில் வந்திருக்கிறேன். 31 ஆண்டுகால சட்டப்போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நான் கொஞ்சம் மூச்சுவிடவேண்டும். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.

எனது தாயார் அற்புதம்மாள் தமிழ் ஊடகங்கள் சிறையில் இருந்தபோது என்னை விடுவிக்க உதவிய முகம்தெரியாத நபர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மரணதண்டனை தேவையில்லாதது என நான் கருதுகிறேன். கருணைக்காக இல்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் உட்பட பலர் இதை சொல்லியிருக்கிறார்கள்” என பேரறிவாளன் தெரிவித்தார்.

தனது மகனின் 30 ஆண்டுகால ஜெயில்வாழ்க்கை முடிவுக்கு வந்ததை குறித்து பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பேரறிவாளனுக்கு திருமணம் செய்வது குறித்து குடும்பத்தினர் விரைவில் முடிவு செய்வார்கள் என கூறினார்.

பேரறிவாளனின் நன்னடத்தை மருத்துவநிலை சிறையில் பெற்ற கல்வித்தகுதி 2015 டிசம்பர் முதல் கருணைமனு நிலுவையில் இருந்தது உள்ளிட்ட பலகாரணங்களை கருத்தில்கொண்டு உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. மேலும் கருணை மனுவை காலம் தாழ்த்திய ஆளுநரை கடிந்துகொண்டது. இந்த பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜீவை 21 மே 1991 ல் படுகொலை செய்த பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து சதிச்செயல்களில் ஈடுபட்டார் என்பது நிரூபணமானது.

மேலும் இதே உச்சநீதிமன்றம் 2014ல் பேரறிவாளனுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பிரதமரை கொன்றவருக்கு விடுதலையா என ஒருசாராரும் நீண்டகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என ஒருசாராரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.