ஓவர் அட்ராசிட்டி செய்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா… பப்லிசிட்டிக்கு ஆசைப்பட்டு கைதாக போகிறாரா.?

0
Follow on Google News

கோவையை சேர்ந்த பெண் டிரைவர் ஷர்மிளா அவருடைய வீடியோக்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்ததால் மீடியாவின் வெளிச்சத்திற்கு வந்து பிரபலமாக அறியப்பட்டார், மேலும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணம் செய்து,அது செய்தியாக வெளியானதை தொடர்ந்து மேலும் பெண் டிரைவர் ஷர்மிளாவை பிரபலப்படுத்தியது.

நாளடைவில் பெண் டிரைவர் ஷர்மிளாவின் நடவடிக்கைகள் அவர் ஒரு விளம்பர பிரியர் என்பதை வெளிப்படுத்தியது. இந்நிலையில் கடந்த மாதம் கார் ஓட்டுநராக இருக்கும் சர்மிளா அவருடைய கார் உள்ளே அமர்ந்து கொண்டு கோவையில் சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் பனி செய்து கொண்டிருந்த பெண் போலீஸ் அதிகாரி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார், அதில் அந்த பெண் போலீஸ் அதிகாரி வாகனங்களை வழிமறித்து கைநீட்டி பணம் வாங்குவதாக தெரிவித்த சர்மிளா,

மேலும் வாகன ஓட்டியை கெட்ட வார்த்தையில் பேசியதாக பெண் ஓட்டுநர் சர்மிளா வெளியிட்டுள்ள வீடியோவில் இடம் பெற்றுள்ள அந்த பெண் போக்குவரத்து போலீஸ் அதிகாரி, சர்மிளா சொல்வது போன்று யாரிடமும் பணம் வாங்குவது போன்றோ, எந்த ஒரு ஓட்டுனரையும் கெட்ட வார்த்தையில் திட்டுவது போன்று இல்லை, அவர் ட்ராபிக்கை கிளியர் செய்யும் வகையில் அவருடைய கடமையை செய்வது போன்று தான் இருந்தது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அந்த வீடியோவில் இடம் பெற்ற பெண் போலீசார் ராஜேஸ்வரி புகார் அளித்தார். அதில்,”நான் காந்தி புரம் டெக்ஸ்டூல் பாலத்தில் போக்கு வரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது ஷர்மிளா என்பவர் தனது காரை போக்கு வரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்தார். இதனால் காரை அங்கிருந்து எடுக்கும் படி கூறினேன். ஆனால் அவர் காரை எடுக்காமல் என்னை வீடியோ எடுத்தார்.

இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினேன். இதையடுத்து, அவர் காரை அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் நான் வாகன ஓட்டிகளை மரியாதை குறைவாக பேசியதாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால் உண்மையில் நான் அவரை திட்டவில்லை. என்னை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், போலியான செய்தியை பரப்பி வீடியோ வெளியிட்ட ஷர்மிளா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் IPC 506(i), 509, 66C ஐடி சட்டத்தின் இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் கடமையை சிறப்பாக செய்து கொண்டிருந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரியை ஆதாரமில்லாமல் குற்றசாட்டுகளை தெரிவித்து வீடியோ வெளியிட்ட சர்மிளா, அவர் தெரிவித்த குற்றசாட்டு உண்மை என்றால் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும், இல்லை என்றால் சர்மிளா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்போது தான் விளம்பரத்துக்காக பொய்யான வீடியோக்களை வெளியிட மாட்டார்கள் என மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமின் கோரி ஷர்மிளா தரப்பில், கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சமூக ஊடகத்தில், லைக்ஸ் பெறுவதற்காக, வேண்டுமென்றே வீடியோ வெளியிட்டு உள்ளதாகவும், பெண் போலீசை மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்ததால், அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என்றும், அரசு தரப்பில் வாதிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா, பெண் டிரைவர் ஷர்மிளா முன்ஜாமின் மனுவை ‘டிஸ்மிஸ்’ செய்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பணியில் இருந்த பெண் போலீசார் குறித்து தவறான வீடியோ வெளியிட்டதற்காக பெண் டிரைவர் சர்மிளா கைது செய்ய படலாம் என்றும் கூறபடுகிறது.