வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல்நிலை பாதிக்கப் பட்டு போராடி வந்த பீஷ்மா என்ற வெள்ளை புலி நேற்று மாலை உயிரிழந்தது. சென்னைக்கு அடுத்து வண்டலூரில், வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இந்த உயிரியல் பூங்கா ஆங்கிலேயர் ஆட்சியில் எட்வர்ட் என்பவரின் முயற்சியால் 1855ல் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் இருந்த மெட்ராஸ் பூங்கா இவரால் வண்டலூருக்கு மாற்ற பட்டது.
இந்த வண்டலூர் உயிரியல் பூங்கா ஆசியாவிலோ மிக பெரிய அளவிளான உயிரியல் பூங்காவாகவும், இந்தியாவிலோ முதல் உயிரியல் பூங்கா என்ற சிறப்பை பெற்றது. இங்கு சிங்கம், யானை, வெள்ளைபுலி, வங்கபுலி, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை, காட்டு மாடு, மனித குரங்கு, சிங்கவால் குரங்கு, வியக்க வைக்கும் பறவைகளும் என இங்கு உள்ளன. இந்த உயிரியல் பூங்காவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வனவிலங்குகளை வந்து ரசித்து செல்வார்கள்.
இதில் கர்ஜிக்கும் கம்பீரத்தோடு பிஷ்மா என்ற வெள்ளை புலி ஒன்று உள்ளது. அந்த வெள்ளை புலி நீண்ட நாட்களாக கிட்னி பிரச்சினை, அல்சர், பக்கவாதம் போன்ற நோய்களால் அவதிப்பட்டு வந்தது. மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தும் வெள்ளை புலியின் உடல் நிலை மோசமடைந்தது. பல நாள் போராடியும் வெள்ளை புலி பீஷ்மா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ஏற்கனவே கொரோனா தொற்றால் இரண்டு சிங்கங்கள் உயிரிழந்த நிலையில் தற்போது கம்பீர் அதிலும் அழகிலும் அனைவரையும் வியக்க வைத்த பீஷ்மாவின் இழப்பு தமிழகத்தையே கலங்க வைத்துள்ளது.