பாக்கிஸ்தான் தப்பி செல்ல தயாராக இருந்த ஜாபர் சாதிக்… காட்டி கொடுத்த செல் போன் சிக்னல் ..

0
Follow on Google News

நாட்டையை உலுக்கிய போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் தமிழகத்தைச் சார்ந்த ஜாபர் சாதிக் பாக்கிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மாநிலத்தில் பதுங்கி இருந்த நிலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யபட்டுள்ளான். கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்யிடம் நடந்த சுமார் இரண்டுமணி நேர விசாரணையில், அவன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது போதை பொருள் கடத்தல் மன்னன் சாபர் சாதிக் தான் போதைப் பொருள் கடத்தியது உண்மைதான் என ஒப்பு கொண்டுள்ளான், அதில் வரும் பணத்தில் சினிமாவில் முதலில் செய்ததும், அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுத்ததும், மேலும் ஓட்டல் மற்றும் கட்டுமான தொழிலில் முதலீடு செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தலைவரைவாக இருந்த கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை கைது செய்வது சாத்தியம் இல்லை என்றும், அவர் நிச்சயம் தப்பித்து விடுவார். அல்லது கொலை செய்யப்பட்டு தற்கொலை என செய்திகள் வரலாம் என்று பல யூகங்கள் அடிப்படையில் தகவல் வெளியானது. இந்த நிலையில் ஜாபர் சாதிக் தமிழகத்தில் இருந்து தப்பி திருவனந்தபுரம் சென்றுள்ளான்.

அங்கிருந்து மும்பை சென்ற ஜாபர் சாதிக் பூனே சென்று அதன் பின்பு பாக்கிஸ்தான் ஒட்டியுள்ள ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதுக்கி இருந்த ஜாபர் சாதிக்கை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ்சார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்நிலையி ஜாபர் சாதிக் எதற்காக பாக்கிஸ்தான் ஒட்டியுள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருந்தார் என சந்தேகம் வலுத்துள்ளது.

ஜாபர் சாதிக் தலைமைறைவான உடனே, அவர் எங்கும் தப்பி சென்று விடாமல் இருக்க இந்தியாவில் உள்ள அணைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது, இதனால் அவர் விமானம் மூலம் தப்பி முடியாது சூழல் ஏற்பட்டது. மேலும் கடல் மார்க்கமாகவும் தப்பி செல்லாத வகையில் கடலோர பகுதியில் தீவிரமாக கண்காணிக்க பட்டு வந்த நிலையில்,

தரைமார்கமாக ராஜஸ்தானில் உள்ள பாக்கிஸ்தான் பார்டர் வழியாக பாகிஸ்தானுக்கு தப்பிக்க திட்டமிட்டு இருந்தானா,? ஜாபர் சாதிக் என்கிற சந்தேகம் வலுத்துள்ளது. அந்த வகையில் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் பாகிஸ்தானுக்கு தப்பிச்செல்ல இருந்தது உண்மையா.? என்பது அடுத்தடுத்த விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜாபர் சாதிக் தமிழ்நாட்டில் இருந்து தப்பித்து திருவனந்தபுரம் சென்று அங்கே அவருடைய சிம் கார்டுகளை மாற்றி, அங்கிருந்து மும்பைக்கு சென்று அங்கேயும் வேறு ஒரு சிம்கார்டை மாற்றி, அங்கிருந்து பூனே அதன் பின்பு ராஜஸ்தான் என இப்படி ஒவ்வொரு இடத்திற்கும் மாற்றி மாற்றி வெவ்வேறு சிம்கார்டுகளை பயன்படுத்தி சென்றுள்ளான் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்.

அந்த வகையில் தொடர்ந்து அவர் பயன்படுத்தி வந்த சிம் கார்டுகளை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போதை பொருள் தடுப்பு போலீசார். ஜாபர் சாதிக் எங்கே சென்றுள்ளார் என்று தொடர்ந்து பின்தொடர்ந்து ராஜஸ்தானின் அவன் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்து சுற்றி வளைத்த போதை பொருள் தடுப்பு போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அடுத்தடுத்து இவன் பின்னணி குறித்து பல தகவல் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.