ஒரு பெண்ணுக்கு இருவரும் மோதிக்கொண்ட சம்பவம்…சமாதானம் செய்தவருக்கு வெட்டு குத்து..

0
Follow on Google News

திருப்பூர் : தமிழகத்தில் கொலை மற்றும் சமூக குற்றங்கள் சர்வசாதாரணமாக நடைபெற்றுவருகிறது. நேற்று முன்தினம் ஒருதலைக்காதல் விவகாரத்தில் ஒரு கல்லூரி மாணவி கொல்லப்பட்டது திருச்சியை பதட்டமடைய செய்தது. தற்போது மீண்டும் அதே திருச்சியில் காதல் விவகாரத்திற்க்காக இளைஞர்கள் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது.

திருப்பூர் வட்டம் ஆண்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் ஹரி மற்றும் செந்தில். இவர்கள் இருவரும் ஓரே வீட்டில் வாடகைக்கு தங்கிவருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் செந்தில் ஒரு பெண்ணை காதலித்து .வந்துள்ளார்.

அதேபெண்ணை சக்திவேல் என்பவரும் காதலித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில் தனது நண்பரான ஹரியை அழைத்துக்கொண்டு சக்திவேலின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே சக்திவேல் இல்லாததால் அவரின் அம்மாவுடன் இருவரும் பேசியதாக தெரிகிறது. அதில் வாக்குவாதமாகிய நிலையில் சக்தியின் தாயாரை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

சக்தியின் தாயார் உடனே அலைபேசியில் சக்தியை அழைத்துள்ளார். சக்திவேல் தனது சகோதரர் அஜித்துடன் பனியனை வெட்டும் கத்தியுடன் வந்து ஹரி மற்றும் செந்திலை தாக்கினர். இதில் நிலைகுலைந்து பயந்துபோய் தப்பித்து இருவரும் ஓடியுள்ளனர். விடாமல் துரத்திய சக்திவேல் மற்றும் அஜித்தை அந்த வழியாக வந்த ராஜ்குமார் என்பவர்த்தடுத்து சமாதானம் பேசியுள்ளார்.

சக்தி ஹரி இருவரும் தப்பித்துவிட வகையாய் சிக்கியுள்ளார் ராஜ்குமார். அவரையும் சக்தி சகோதரர்கள் கத்தியை கொண்டு தாக்க இருவரின் தாயார் தனது பங்கிற்கு மிளகாய்ப்பொடியை தூவியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் வயிறு கைகால் மற்றும் முதுகில் பலத்த காயம் வாங்கிய ராஜ்குமார் உயிர்பிழைக்க தப்பியோடினார்.

விடாமல் துரத்திச்சென்று ராஜ்குமாரை தாக்க முற்படுகையில் அவர் அருகிலிருந்த இருசக்கரவிற்பனை கடையில் பதுங்கினார். நுழைய முயன்ற சக்தி சகோதரர்களை கடை உரிமையாளர் தடுத்து நிறுத்தியதுடன் கடையை மூடி ராஜ்குமாரை காப்பாற்றினார். சகோதரர்களை சமாதானம் செய்து அனுப்பிவிட்ட உரிமையாளர் ராஜ்குமாரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தகவலறிந்த போலீசார் விரைந்துவந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். மேலும் மத்திய திருப்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.