கோயம்புத்தூர் : தன்னை திருமணம் செய்து இரண்டு வாரங்கள் மட்டும் வாழ்ந்துவிட்டு முதலிரவின்போது தனக்கு தெரியாமல் எடுத்த வீடியோவை காட்டி எஸ்.ஐ ஒருவர் மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் ஒரு பெண் புகார் கொடுத்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மிக சமீபத்தில் தான் கிருஷ்ணகிரி போலீசார் இருவர் கஞ்சா வழக்கு போடுவதாக கூறி இளம்பெண் ஒருவரை கற்பழித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நெல்லை ராதாபுரம் உறுமங்கலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் இளவரசி. இவர் நேற்று கோயம்புத்தூர் கலெக்டரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் தெரிவித்திருந்தது அனைவரையும் திகைப்புக்குள்ளாகியிருக்கிறது.
அவர் தனது மனுவில் “எனக்கும் முதுமொத்தன் மொழி பகுதியை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் என்பவருக்கும் 2021 ஜூன் மாதம் 13 அன்று கல்யாணம் நடந்தது. ஆறுமுக நாயனாருக்கு வரதட்சணையாக 20 பவுன் நகை மற்றும் 1 லட்சம் ரொக்கம் கொடுத்தது மட்டுமல்லாமல் ஆறுமுக நயினாருக்கு தனியாக நகை ஐந்து பவுனும் கொடுத்திருந்தோம்.
திருமணத்தன்று இரவு எனக்கு விருப்பமில்லை என கூறினேன். அதையும் மீறி எனது விருப்பத்திற்கு மாறாக மயக்க மாத்திரைகளை கொடுத்து கட்டாய உறவு கொண்டார். அப்போது எனக்கே தெரியாமல் வீடியோவும் எடுத்துள்ளார். வெறும் இரண்டுவாரங்களே வாழ்ந்துவிட்டு கோயம்புத்தூர் வந்துவிட்டார். அதன்பின்னர் முடிந்தால் எங்கள் வீட்டில் இரு அல்லது உன்வீட்டுக்கு ஓடிவிடு என மிரட்டுகிறார்.
மேலும் தோஷம் கழிப்பதற்காகவே திருமணம் செய்துள்ளதாக அவரது பெற்றோர்கள் என்னிடம் கூறினர். அவர்மீதும் அவருக்கு உடந்தையாக செயல்படுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கலெக்டருக்கு அளித்த மனுவில் இளவரசி தனது சோகத்தை குறிப்பிட்டுள்ளார்.