மதம் மாற காதலி மறுப்பு… அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட காதலன்..! பின் நடந்தது என்ன தெரியுமா.?

0

திருப்பூர் : சமூகவலைத்தளங்களின் மூலம் அறிமுகமாகி காதல்வலையில் வீழ்ந்து அல்லது வீழ்த்தப்பட்டு வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம். அதிலும் வடமாநிலங்களில் பெரும்பான்மை சமூகத்தின் பெயரை வைத்துக்கொண்டு பழகி காதல்வலையில் வீழ்த்தி திருமணம் செய்யவேண்டுமெனில் மதம் மாறவேண்டும் என கட்டாயப்படுத்துபவர்கள் ஏராளம்.

அதுபோன்ற ஒருசம்பவம் தமிழகத்திலேயே நடந்திருப்பது மாநிலத்தையே திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இமாம் ஹபீப். இவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த பழக்கம் மெல்லமெல்ல காதலாகி கசிந்துருகியது.

ஒருகட்டத்தில் ஒருவரையொருவர் பிரியமுடியாது என தோணவே இருவரும் சிறுகுடி அருகே ஒரு வீட்டைவாடகைக்கு எடுத்து தங்கி மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். இரண்டுமாதம் இருந்த அந்த சந்தோசம் திடீரென மடைமாறியுள்ளது.

அந்தப்பெண்ணை மதம் மாறச்சொல்லி இமாம் ஹபீப் கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.அதனால் வெகுண்டெழுந்த அந்த பெண் மதம் மாறுவதற்கு ஒப்புக்கொள்ளாமல் பிரிந்துசென்றார். இதனால் குமுறிய இமாம் அந்தப்பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை இணையத்தில் உலவவிட்டார் என கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து கடந்த 4ம் தேதி அந்த பெண் புகாரளித்தார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இமாம் மீது ஜாதியை சொல்லி வசைபாடியது, பெண்ணை கொடுமைப்படுத்தியது, அந்தரங்க புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பரப்பியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் தொடர்ந்து இமாமிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் கரூர் பகுதியே பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது. தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. அதேபோல சமீபத்தில் கட்டாய மதமாற்றத்தால் அரியலூர் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.