மதுரையில் கொடி கட்டிப் பறக்குது சாலையோர விபச்சாரம்… லார்ஜ் ஆக பயன்படும் பூங்கா…

0

மதுரையில் இரவு நேரங்களில் விபச்சாரம் கொடி கட்டிப் பறக்க துவங்கியுள்ளது. காவல்துறை பல முறை எச்சரித்தும் திருந்துவதாக தெரியவில்லை. மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், எக்கோ பார்க், ரயில் நிலையம் போன்ற பல இடங்களில் சாலையில் நின்று கொண்டு விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் பெரும்பாலானவர் திருநங்கைகள் தான் சாலையோர விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

உடை, உடல் அலங்காரம் செய்துகொண்டு, பார்ப்போரை கவரும் வகையில் சாலையில் நின்று கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை விபச்சாரத்திற்கு அழைக்கின்றனர். சிலரின் வாகனத்தை வழிமறித்து விபச்சாரத்திற்கு அழைப்பதால், அந்த வழியாக செல்லுவதை தவிர்க்கின்றனர். இவர்களின் அழகில் மயங்கி பெரும்பாலும் பாதிப்படைவது இளைஞர்களும் வயதான தாத்தாக்களும் தான்.

விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் சாலையோரம், கடையோரம் உள்ள முட்புதர்கள், பொது கழிப்பறைகள், எக்கோ பார்க் போன்ற இடங்களை லார்ஜ் ஆக பயன்படுத்துகிறார்கள். பணம், செல்போன், நகை பறிக்கும் கும்பல் இதில் ஊடுருவுகிறது. கலாச்சாரத்தை கெடுத்து இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் இதுபோன்ற விபச்சாரங்களை கட்டுப்படுத்த காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் வேண்டுகோள்.