மசாலா பாக்கெட் உள்ளே போதை பொருள் கடத்தல் .! சென்னை விமான நிலையத்தில் 4 பேர் கைது.!

0
Follow on Google News

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் கொரியர் பார்சல் ஒன்றில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தின் ஏர் கொரியர் வளாகத்தில் இருந்த பார்சலை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் மசாலா பொடி என குறிப்பிடப்பட்டிருந்தது. அதை திறந்து பார்த்தபோது, பிரபல நிறுவனத்தின், 50 மற்றும் 100 கிராம் மசாலா பொடி பாக்கெட்டுகள், இதர பலசரக்கு பொருட்களுடன் இருந்தன.

மிளகாய் பொடி மற்றும் சாம்பார் பொடி பாக்கெட்டுகள் சிலவற்றில், 37 வெள்ளை கிரிஸ்டலைன் பொடி பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவை ‘சூடோபெட்ரின்’ என்ற போதைப் பொருள் கலந்தவை என்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. மொத்த 3 கிலோ, சூடோபெட்ரின், போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 30 லட்சம்.

தேனியைச் சேரந்த ஒருவரின் பெயரில் இந்த பார்சல் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது. விசாரணையில் சென்னையைச் சேர்ந்த சாதிக்(37) என்பவர் இந்த கடத்தலின் பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடத்தல் தொடர்பாக சாதிக், கான், அந்தோணி, செல்வம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் ரஞ்சன் சவத்திரி வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளார்.