கொரோனவை எதிர்கொள்ள இதை செய்தலே போதும்… சித்த மருத்துவர் விளக்கம்..

0
Follow on Google News

கொரோனா இரண்டாவது அலை யில் உணவு, சித்த மருத்துவம்; யோகா இவற்றின் மூலம் நுரையீரலை எவ்வாறு பலப்படுத்துவது மற்றும் தொற்று பரவாமல் எவ்வாறு வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது” என்ற தலைப்பில் ஜூம் மீட்டிங் வாயிலாக கருத்தரங்கம் நடைபெற்றது, . உணவு மற்றும் சித்த மருத்துவம் குறித்து சித்த மருத்துவர் நளினி பேசியதாவது;

நோய்எதிர்ப்பு சக்தி பெறுவதற்கு புரதசத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இந்தச் சத்தை குழந்தைகள் விரும்பும் வகையில் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்றார். பெரியவர்களுக்கு தளரத் தொடங்கிய தசைகளை மறுகட்டமைப்பு செய்வதற்கு தினமும் இரண்டு முட்டைகள் எடுத்துக்கொள்வது அவசியம் என்றும், காலை உணவிற்கு முன்பு ஊறவைத்த தோல் நீக்கிய பாதாம்பருப்புடன் பேரிச்சம்பழம் அல்லது உலர்திராட்சையை சேர்த்து உண்ணவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நீர்ச்சத்து குறையாமல் இருக்க காய்கறி சூப், மோர், பானகம் இவைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். மாலை டீ, காபிக்கு பதிலாக மிளகு, ஏலக்காய், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்த மிதமான சூட்டிலான பால் பருகுவது சிறந்தது என்றும் பாரம்பரிய மற்றும் சிறுதானிய உணவுகள் மிகவும் சாலச்சிறந்தது என எடுத்துக் கூறினார். ஆவிபிடித்தல் மூலம் மூக்கில் உள்ள தொற்றையும் மஞ்சள், கல் உப்பு சேர்த்த சுடுதண்ணீர் கொண்டு வாய்கொப்பளிப்பது மூலம் தொண்டையில் உள்ள தொற்றையும் அகற்றலாம் என்றார்.

சித்த மருத்துவத்தில் ஆடாதொடை மணப்பாகு, தாளிசாதி சூரணம், அமுக்கரா சூரணம், திரிகடுகு, திரிபலா, பாலசஞ்சீவி மாத்திரை (சிறுகுழந்தைகளுக்கு), சுவாசகுடோரி மாத்திரை, சாந்த சந்த்ரோதய மாத்திரை மற்றும் உரை மாத்திரைகள் நோய்எதிர்ப்பு சக்திகளை அதிகரித்து நோய்களை தீர்ப்பவையாக இருக்கின்றன என்று கூறினார்.

உடலில் நுரையீரலை பலப்படுத்தி ஆக்ஸிஜன் அதிக அளவில் பெறுவதற்கான யோகா முறைகள் குறித்து மதுரை மகாத்மா காந்தி யோகா இன்ஸ்டிடியூட் இயக்குனர் கங்காதரன் உரையாற்றியதோடு மூச்சுப்பயிற்சி, பஸ்திரிகா மற்றும் கபாலபதி உள்ளிட்ட ஐந்து முக்கியமான யோகா முறைகள் குறித்து செய்முறை விளக்கமும் அளித்தார்.