தீவிரவாதிகளுடன் தொடர்பா.? பாக்கிஸ்தான் ஆதரவு செயல்பாடு.. எந்த நேரமும் NIA அதிகாரியால் கைது செய்யப்படும் சுந்தரவள்ளி…

0
Follow on Google News

பாக்கிஸ்தான் ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக கடந்த காலங்களில் பிரபல பேச்சாளர் சுந்தரவள்ளி பேசிய விவகாரம் இதற்கு முன் தமிழக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தாலும் தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி மற்றும், இந்தியா ராணுவம் குறித்து சுந்தரவள்ளி பேசிய வீடியோ ஒன்றை சமீபத்தில் தமிழக பாஜக முக்கிய தலைவர் ஒருவர் மத்திய உள்த்துறை அமைச்சக அதிகாரி ஒருவரிடம் போட்டு காண்பித்து அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கம் கொடுத்துள்ளார்.

அந்த விடியோவில் சுந்தரவள்ளி பேசியதாவது, “இந்திய ராணுவ வீரர்கள் கொத்துக்கொத்தாக கொலை செய்யப்படுகிறார்கள், ராணுவ வீரர்களின் பிணத்தை வைத்து தன்னை சிறப்படுத்திக் கொள்கிறார் இந்திய பிரதமர் மோடி, மேலும் “சர்ஜிகல் strile” பண்ணினோம் என்று இந்தியாவின் ராணுவமும் பிரதமரும் சொன்னார்கள் ஆனால் ஒரே வாரத்தில் ராணுவ தளவாடங்கள் உள்ள பகுதியில் பதான் கோர்ட்டில் நாலு பயங்கரவாதிகள் உள்ளே பூந்து அடித்தார்கள் என்னய்யா பெரிய பெரிய சர்ஜிகல் strike பண்ணினேன்னு சொல்றீங்க இந்தியாவும் இந்திய ராணுவமும் ஆனால் நான்கு பேர் உள்ள பூந்து அடிச்சுட்டாங்க.

ஏதாவது பிரச்சனை இந்திய பிரதமர் மோடிக்கு வருதுன்னா உடனே ராணுவ வீரர்களை கொல்லனும் . 2500 ராணுவ வீரர்களை ஆடு மாடுகளை போல் வண்டியிலே ஏற்றி வரிசையாக போனார்கள், மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அபிநந்தனை மானத்தோடு அனுப்பினார் என்று எதிரி நட்டு பிரதமரை புகழ்ந்து பேசியும், இந்திய பிரதமர் மோடி ராணுவவீரர்கள் 40 பேரை கொன்று விட்டார் , கொரானா பிரச்சனையில் இந்தியா எதிர்கொள்ள தயாராக இல்லை, இந்தியா தோற்று போய் விட்டது எனறும் கூறிய சுந்தரவல்லி.

மேலும் “அபிநந்தனுக்கு கோட்டு சட்டை எல்லாம் வாங்கிக் கொடுத்து கௌரவமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், எங்களுக்கு அண்டை நாடுகளோடு சண்டை வேண்டாம் என்று இம்ரான்கான் பேசியுள்ளார், இதனால் யாரை பேசியிருக்க வேண்டும் 40 பேரை பாதுகாக்க முடியாத மோடியையா அல்லது கோட்டு சட்டை வாங்கி கொடுத்த இம்ரான்கானையா என்று கசுந்தரவள்ளி அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

இந்நிலையில் இந்த வீடியாவை பாஜக முக்கிய தலைவர் மத்திய உள்த்துறை அதிகாரியிடம் போட்டு காண்பித்து, சுந்தரவள்ளி பின்புலம் என்ன என்பது ஆராயப்பட வேண்டும் என்றும், இந்தியா இறையாண்மைக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் சுந்தரவள்ளிக்கு உள்நாட்டு தீவிரவாத குழுக்களிடம் இருந்து பணம் வருகிறதா என்பதை ஆராயவேண்டும் இதை தேசிய புலனாய்வு அமைப்பின் மூலம் தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என பாஜக முக்கிய தலைவர் கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என மத்திய உள்த்துறை அதிகாரி தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், சுந்தரவள்ளி விவகாரம் தேசிய புலனாய்வு அமைப்பின் கவனத்துக்கு செல்ல இருப்பதாக கூறப்படும் நிலையில், எந்த நேரமும் சுந்தரவள்ளி NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.