தேவதானப்பட்டி : தமிழகத்தில் சாலைவிபத்துகள் அதிகரித்து வருவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு நாட்களில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்திருப்பதாக போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் சென்னை தாம்பரம் அருகே நடந்த ஒரு விபத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் தேவதானப்பட்டி அருகே நடந்தா ஒரு கோரவிபத்தில் ஆட்டோ ட்ரைவர் ஒருவர் பலியானது அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
தேவதானப்பட்டி தெற்குத்தெரு பகுதியை சேர்ந்த வெள்ளைப்பாண்டி என்பவர் ஆட்டோ டிரைவராக இருந்துவந்துள்ளார். வெள்ளைப்பாண்டி நேற்று வத்தலகுண்டு பகுதியில் ஒரு சவாரியை இறக்கிவிட்டு தேவதானப்பட்டி திரும்பிவந்துகொண்டிருந்தார். அதேநேரத்தில் தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவில் சென்றுவிட்டு மினிவேன் ஒன்று திண்டுக்கல் நோக்கி வந்துகொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராவிதமாக எதிரே வந்த மினிவேனில் வெள்ளைப்பாண்டி மோதினார். நேருக்குநேராக மோதியதில் வெள்ளைப்பாண்டி படுகாயமடைந்தார். அதைத்தொடர்ந்து தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். வெள்ளைப்பாண்டியை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆம்புலன்சில் செல்லும்போதே வெள்ளைப்பாண்டி மரணத்தை தழுவினார். அவரது உடல் பெரியகுளம் மருத்துவமனைக்கு போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பியுள்ளனர். அதையடுத்து போலீசார் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.