அடித்து ஆடிய அண்ணாமலை.. சுக்கு நூறாக உடைந்த எடப்பாடி வியூகம்.. அடுத்தது என்ன தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த 35 வருடங்களாக அதிமுக – திமுக என இருந்த தமிழக அரசியல், தற்பொழுது திமுக – பாஜக என்று நகர தொடங்கியுள்ளது. திமுகவுக்கு மாற்றாக மக்கள் பாஜகவை பார்க்கத் தொடங்கி விட்டார்கள். இதனால் பாஜகவின் வளர்ச்சியை தமிழகத்தில் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் பாஜகவின் வளர்ச்சியை ஏற்று கொள்ளாத எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணியில் வைத்து கொண்டே பாஜகவை தமிழகத்தில் வளரவிடாமல் பார்த்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அந்த வகையில் கடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி என்பதை உறுதி செய்தவர், எத்தனை தொகுதி, எந்தந்த தொகுதி என்பதை கடைசி வரை உறுதி செய்யாமல் பார்க்கலாம் என்று காலம் கடத்தி வருவார். ஆனால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு திரை மறைவில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து அவர்களை தன் பக்கம் தக்கவைத்து கொண்டு இறுதியில் பாஜகவை தனித்து விடுவார் எடப்பாடி பழனிசாமி.

கடைசி நேரத்தில் பாஜக போட்டியிட விரும்பும் தொகுதி கிடைக்காமல் வேறு வழியின்றி எடப்பாடி பழனிச்சாமி கொடுக்கும் தொகுதியை ஏற்றுக்கொண்டு, மிக குறைந்த தொகுதிகளை பாஜவுக்கு ஒதுக்கி, அதிலும் திமுக வலுவாக இருக்கும் தொகுதியை பாஜக பக்கம் தள்ளிவிடுவார். இதனால் பாஜகவின் ஒட்டு வங்கி மட்டும் அவர்களின் தனித்துவத்தை தமிழகத்தில் நிரூபிக்காதவாறு செய்து விடுவார் எடப்பாடி பழனிச்சாமி.

அதே பார்முலாவை தற்பொழுதும் தன்னுடைய சிரித்த முகத்துடன் பாஜகவை கையாண்டு வரும் எடப்பாடி அரசியல் வியூகம் அண்ணாமலையிடம் எடுபடவில்லை. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரின் நேரடி தொடர்பில் இருக்கும் அண்ணாமலை நேரடியாகவே தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி வகுக்கும் அரசியல் வியூகத்தை நன்கு அறிந்து அதை சுக்கு நூறாக உடைக்கும் வேலையே தொடங்கிவிட்டார்.

சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஐந்து நிமிடம் சந்தித்து பேச எடப்பாடி பல முயற்சி செய்தும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. கூட்டத்தோடு விமானநிலையத்தில் வரிசையில் நிற்க வைத்து பிரதமருக்கு பூக்கொத்தை கொடுக்க வைத்து அனுப்பப்பட்டார் எடப்பாடி. கடந்த செப்டம்பர் மாதம் பிரபல தொழிலதிபர் உதவியுடன் கடும் முயற்சி செய்து அமித்ஷாவை டெல்லியில் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி, சமீபத்தில் தமிழகம் வந்த அமிர்தாவை சந்திக்க நேரம் கேட்டும் அவருக்கு அந்த வாய்ப்பை பாஜக கொடுக்கவில்லை.

இதனால் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி மிக நெருக்கமாக இருக்கின்றார் என்கின்ற ஒரு பிம்பத்தை காட்டி தன்னுடைய கட்சி தொண்டர்களையும் கட்சியை நிர்வாகிகளையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கும் எடப்பாடியின் போலி பிம்பம் உடைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பாஜக தலைமையிலான கூட்டணிக்காக ஏற்பாடுகளை தற்பொழுது இருந்தே அண்ணாமலை தொடங்கிவிட்டார்.

அதற்கான முன்னோட்டம் தான், கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட ஏசி சண்முகத்தை பாஜக அலுவகத்திற்கு அழைத்து அமித்ஷாவை சந்திக்க வைத்து பாஜக கூட்டணியில் இடம் பெற வைத்துள்ளார் அண்ணாமலை.அதே போன்று தேமுதிக, ஜிகே வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோருடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை திரைமறைவில் அண்ணாமலை உறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனித்து விடப்படுவார், அப்போது பாஜக கூட்டணியை ஏற்றுக்கொண்டு அண்ணாமலை ஒதுக்கும் தொகுதியை பெற்றுக் கொள்வதை தவிர வேறு வழி இருக்காது. அதே போன்று ஓபிஎஸ் – இபிஎஸ் இருவருக்குமான பிரச்சனையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் பட்சத்தில், மேலும் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி இல்லாமல் தனித்து நிற்கும் பொழுது அவரால் பல தொகுதிகளில் டெபாசிட் வாங்குவதே கடினம்

அதே போன்று அதிமுக மேல் மட்ட தலைவர்கள் பலர் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக பக்கம் வருவதற்கு தயாராக இருப்பதாக அண்ணாமலைக்கு சிக்னல் கொடுத்துள்ள நிலையில், அதிமுக கீழ்மட்ட தலைவர்களை பாஜவில் இணைப்பதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பலம் என்ன என்பதை நிரூபித்து, அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் திமுகவுக்கு மாற்றாக பாஜகவை வலுவாக உருவாக்க வேண்டும் என்கின்ற திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார் அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.