பாஜக அதிரடி…. ஜீ தமிழில் இருந்து பொடனில தட்டி துரதியடிக்கப்படும் திமுக கருப்பு ஆடுகள் யார் யார் தெரியுமா.?

0
Follow on Google News

ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் பின்னணியில் இருந்து கொண்டு தங்களை நடுநிலையராக காட்டி கொண்டு, பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக ஊடகங்கள் வாயிலாக தங்கள் விஷமத்தை சிலர் கக்கி வருவது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருவது குறிப்பிடதக்கது. அந்த வகையில் கடந்த வருடம் நியூஸ் 18 தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் பின்னனி கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு கலையெடுக்கப்பட்டனர்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு வந்த புகாரின் அடிப்படையில், திமுக மற்றும் திக சித்தாந்தம் பின்னணியில் இருந்து வந்த பத்திரிகையாளர் குணசேகரன், செந்தில் மற்றும் சிலர் அடையாளம் காணப்பட்டு அவர்களை நியூஸ் 18 தொலைக்காட்சி நிறுவனம் வேலையை விட்டு துரதியடிக்கப்படுவதை உணர்ந்து தானாகவே அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்கள். இதற்க்கு முக்கிய பங்காற்றியது பாஜக என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஓன்று தற்போது கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை கேலி கிண்டல் செய்வது போன்று காட்சிகள் அமைந்துள்ளது. இதனை திமுக எம்பி செந்தில்குமார், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, போன்றோர் வரவேற்று கருத்து தெரிவித்து இருந்த நிலையில், இதற்கு பாஜக மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக பாஜக அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கையில், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு முருகன் அவர்கள் தொடர்பு கொண்டு, தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார் என தெரிவித்திருந்தது இந்த விவகாரம் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

இந்நிலையில் ஜீ குழும தலைவராக இருக்க கூடிய சுபாஷ் சந்திரா என்பவர் பாஜகவை சேர்ந்தவர். பல மொழிகளில் ஜீ தொலைக்காட்சி தனது சேவையை செய்து வரும் நிலையில், தமிழில் ஒளிபரப்பாகும் ஜீ தொலைக்காட்சியில், திமுக ஆதரவாக செயல்பட்டு வரும் கரு.பழனியப்பன் ஊடுருவிய பின்பு அந்த தொலைக்காட்சியில் சில மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில முக்கிய நிகழ்ச்சிகளின் இயக்குனர்களின் பின்னணியில் கரு.பழனியப்பன் இருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி குறித்து கேலி, கிண்டல் செய்து ஒளிபரப்பான நிகழ்ச்சில் பெரும் சர்ச்சையாக வெடித்து நேரடியாக பாஜகவை சேர்ந்த ஜீ குழும தலைவருக்கே புகார் சென்ற வண்ணம் இருப்பதால். ஜி தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றும் அரசியல் சார்புடையவர்களை ஆய்வு செய்து அவர்களை கட்டம் கட்டும் வேலையை ஜீ குழுமம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த வருடம் நியூஸ் 18ல் இருந்து திமுக ஆதரவாளரான குணசேகரன் , சீப்பு செந்தில் போன்றோர் துரத்தப்பட்டது போன்று இம்முறை ஜி தமிழ் தொலைக்காட்சியில் இருந்து கரு.பழனியப்பன் உட்பட திமுக ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட இருப்பதாக கூறபடுகிறது.

யோவ் பாரதிராஜா.. எதுக்குய்யா இந்த மானங்கெட்ட பொழப்பு.!உச்சக்கட்ட அவமானத்தில் பாரதிராஜா..! சித்தார்த்தை புகழ்ந்து தள்ளி செமத்தியா வாங்கிய ஜோதிமணி..!