பெண்கள் ஹாக்கி அணி, சிறப்பான செயல்படுகளால் பெருமைப்படுகிறேன்.. பிரதமர் மோடி வாழ்த்து..

0
Follow on Google News

இன்றும் இதர போட்டிகளிலும் மன உறுதியுடன் விளையாடிய நமது பெண்கள் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் சிறப்பான திறனை வெளிப்படுத்தியது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். அணி குறித்து தாம் பெருமைப்படுவதாகக் கூறிய பிரதமர், எதிர்வரும் போட்டிக்கும் வருங்கால முயற்சிகளுக்கும் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.

இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், “டோக்கியோ2020 குறித்து நாம் நினைவில் வைத்துக்கொள்ளப் போகும் விஷயங்களில் ஒன்றாக நமது ஹாக்கி அணிகளின் சிறப்பான விளையாட்டு இருக்கும். இன்றும் இதர போட்டிகளிலும் மன உறுதியுடன் விளையாடிய நமது பெண்கள் ஹாக்கி அணி, சிறப்பான திறனை வெளிப்படுத்தியது. அணி குறித்து பெருமைப்படுகிறேன். எதிர்வரும் போட்டிக்கும் வருங்கால முயற்சிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று கூறியுள்ளார்.