இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மும்பையில் பிறந்தவர். இவர் சிறு வயதில் இருக்கும் போதே இவருடைய குடும்பம் ஹைதராபாத்தில் குடியேறி அங்கே நிரந்தரமாக வசித்து வந்தனர். இந்தியாவிற்காக டென்னிஸ் விளையாட்டில் பல பதக்கங்களை வாங்கி குவித்தவர் சானியா மிர்சா. இவர் பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயீப் மாலிகை கடந்த 2010 ஆம் ஆண்டு காதலித்து இரண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
மாலில் ஏற்கனவே ஆயிஷா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், அடுத்தவர் கணவர் என்று தெரிந்தே மாலிக்கை காதலிக்க தொடங்கியுள்ளார் சானியா மிர்சா. ஏற்கனவே திருமணம் முடிந்த மாலிக் புதிய காதலி சானியா மிர்சா கிடைத்ததும், கடந்த 2010ம் ஆண்டு மனைவி ஆயிஷாவை விவாகரத்து செய்துவிட்டு, அதே ஆண்டு சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மாலிக்கை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு சானியா மிர்சா எதிராக இந்தியாவில் ஒரு சில தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்தமால் திருமணம் செய்து கொண்ட பிறகு நிரந்தரமாக பாக்கிஸ்தானில் குடியேறினார் சானியா மிர்சா. இவர்களுக்கு ஒரு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இந்தியாவில் பலரது எதிப்புக்கு உள்ளானார் சானியா மீர்சா. இந்தியாவில் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலில் 40க்கு மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் பலியான நிலையில்.இதுகுறித்து சானியா மிர்சா கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருவது குறித்து விமர்சனம் எழுந்தது.
தனக்கு எதிராக எழுந்த விமர்சனத்துக்கு பதில் தரும் விதத்தில் அப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் சானியா மீர்சா, அதில் மக்கள, மேலும் வெறுப்பை பரப்புவதற்கு பதில் அமைதிக்கான பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்களுடைய வெறுப்பு மற்றும் கோபத்தை வேறெங்கும் காட்ட வாய்ப்பு கிடைக்காததால் எங்களைப் போன்ற பிரபலங்கள் மீது காட்டுகிறீர்கள். தீவிரவாத தாக்குதல்களை பொதுவெளியில் தான் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும்,மொட்டை மாடியில் வந்து நின்று கத்த வேண்டிய அவசியமும் இல்லை என தெரிவித்த சானியா.
குறிப்பாக புல்வாமா தாக்குதல் குறித்து தாம் பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சானியா மிர்சா தெரிவித்திருந்தது பெரும் பிரச்சனையாக அப்போது உருவெடுத்தத. சானியா இந்த கருத்துக்கு பாகிஸ்தான் மக்கள் ஆதரவாகவும் பல இந்தியர்கள் எதிராகவும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானின் மருமகளான சானியா மிர்சா சமீப காலமாக அவருடைய கணவர் மாலிக் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருவரும் தனி தனியாக பாக்கிஸ்தானில் பிரிந்து வாழ்ந்து வருவதாக பாக்கிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் விரைவில் விவகாரத்து செய்ய இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ள சானியா மீர்சா விவாகரத்துக்கு பின்பு தன்னுடைய குழந்தையுடன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி துபாயில் செட்டிலாக இருப்பதாக கூறப்படுகிறது.