தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அங்கு இந்திய அணி விளையாட செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர் டிசம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி டிசம்பர் 8 ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா செல்ல இருந்தது.
இப்போது இந்தியா ஏ அணி தென் ஆப்பிரிக்காவில் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் தடுப்பூசிக்கு எதிராக செயல்படும் என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தென் ஆப்பிரிக்காவோடு போக்குவரத்து தொடர்பைத் துண்டித்துள்ளன.
இந்நிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று கிரிக்கெட் தொடரை விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ‘இப்போதே அதுகுறித்து முடிவு எடுக்க முடியாது’ என்று கூறியுள்ளார். இது சம்மந்தமாக பிசிசிஐ மற்றும் மத்திய அரசு தரப்பில் ஆலோசனை நடக்கும் எனத் தெரிகிறது.