தொலைபேசியில், என்னய்யா…. எங்களை தாக்கி மாநாடு படம் எடுத்திருக்க என கேட்ட உதயநிதி..!வெங்கட்பிரபு கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?

0
Follow on Google News

பல போராட்டங்களுக்கு பின் திரைக்கு வந்துள்ள நடிகர் சிம்பு, எஸ் ஜே சூர்யா, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள மாநாடு திரைப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன் பிரசாத் ஸ்டுடியோவில் மாநாடு படத்தில் பத்திரிக்கையாளர் காட்சி நடைபெற்றது. படம் முடிந்ததும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இடம் தான் பேசியதாக கூறிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.

அப்போது உங்களிடம் இரண்டே கேள்வி தான் கேட்கவேண்டும், மாநாடு படம் வெளியாவதற்கு உதயநிதி ஸ்டாலின் தான் பஞ்சாயத்து செய்ததாகவும், 6 கோடி ரூபாய் கொடுத்து கலைஞர் டிவிக்கு வாங்கியதாகவும். மேலும் மாநாடு படம் வெளிவருவதற்கு முன்பு வெளியாவதற்கு தடையாக இருந்தது உதயநிதி ஸ்டாலின் தான் என்றும். சிலம்பரசனுக்கு உதயநிதிக்கும் சில மோதல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அது உண்மையா.? என்று பயில்வான் ரங்கநாதன் கேட்டுள்ளார்.

அதற்கு மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நான் இந்தப் படம் தொடங்கியது முதல் எனக்கு எதிர்மறையான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். நான் யுவன் சங்கர் ராஜாவுக்கு பணம் தருவதில் பாக்கி வைத்துள்ளதால் யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசை அமைப்பதில்லை என்றும், மேலும் சிம்பு எனக்கு 3 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும், அதனால் எனக்கும் சிம்புவுக்கும் பிரச்சனை என்றும், இப்படி தொடர்ந்து பொய் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் இதில் எதுவுமே உண்மையில்லை. மாநாடு படம் வெளிவருவதற்கு முன்பு உதயநிதி தான் பஞ்சாயத்து செய்து வெளிவர உதவி செய்ததாகவும், கலைஞர் தொலைக்காட்சி தான் மாநாடு படத்தை வாங்கி உள்ளதாக கூறுகிறார்கள். இது அனைத்தும் அக்மார்க் முத்திரை குத்திய பொய் என்றும் மேலும் கலைஞர் டிவி சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை பார்த்தார். அதேபோல் சன் டிவி உட்பட அனைத்து தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்தவர்களும் இந்த படத்தைப் பார்த்தார்கள.

அனைவரும் படம் நல்லா இருக்கு நல்லா இருக்கு என்று சொன்னார்கள், ஆனால் யாரும் இதுவரை இந்தப் படத்தை வாங்க முன்வரவில்லை. மேலும் உதயநிதி ஸ்டாலின் எனக்கு நெருங்கிய நண்பர்களிடம், அவரே மாநாடு படம் முழுக்க எங்களுடைய அரசை திட்டி எடுத்துள்ளார், எங்க அரசியலை தாக்கி தான் எடுத்துள்ளார்கள், அப்படி இருக்கையில் நான் எப்படி கலைஞர் டிவிக்கு இந்த படத்தை வாங்குவேன் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய உதயநிதி என்னையா…. இப்படி ஒரு படம் எடுத்து வைத்திருக்க, முழுக்க முழுக்க எங்களுடைய அரசை திட்டி படம் எடுத்திருக்க என்று உதயநிதி கேட்டுள்ளார். அதற்கு படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று பதிலளித்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் எனக்கு ஒரு டீ கூட வாங்கித் தரவில்லை என சிரித்துக்கொண்டே சுரேஷ் காமாட்சி சொன்னதாகவும்,

மேலும் இதுவரை எந்த ஒரு தொலைக்காட்சியும் மாநாடு படத்தை வாங்கவில்லை.நான் ஒருவரிடம் வாங்கிய வாங்கிய பணத்திற்கு உத்தரவாதம் அளித்து பேப்பரில் கையெழுத்து போட்டு, படம் வெளியாவதற்கு உதவி செய்தது சிலம்பரசனின் தாயார் உஷா ராஜேந்திரன் அவர்கள் தான், என சுரேஷ் காமாட்சி சொன்னதாக பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.