இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கான்பூர் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. கான்பூரில் நடந்து இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இப்போது இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. நான்காம் நாள் ஆட்டத்தில் இன்று இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருகின்றனர்.
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இந்தியா 345 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய நியுசிலாந்து 296 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 49 முன்னிலை பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 234 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து டிக்ளேர் செய்தது.
முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி 65 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் நியுசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 284 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியுசிலாந்து நான்காம் நாள் ஆட்டமுடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் சேர்த்து, இன்று பேட்டிங்கை தொடர்ந்து ஆடியது. உணவு இடைவேளை வரை விக்கெட்டை இழக்காமல் ஆடியது.
பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்தது. இதையடுத்து தேநீர் இடைவேளைக்குப் பின் ஜடேஜா மற்றும் அஸ்வின் சுழலில் நியுசி பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டை இழந்தனர். இதனால் 9 விக்கெட்களை இழந்து நியுசிலாந்து தடுமாறியது. ஆனால் கடைசி விக்கெட்டை எடுக்க முடியாததால் போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் நூலிழையில் இந்தியா வெற்றியை பறிகொடுத்தது.