சாலை விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஷேன் வார்ன் !

0

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன் தனது மகனுடன் செல்லும் போது சாலை விபத்தில் சிக்கியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான் பவுலர்களில் ஒருவரும், உலக கிரிக்கெட்டின் என்றென்றைக்குமான சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவருமான ஷேன் வார்ன் தனது மகன் ஜாக்சனோடு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வாகனம் கவிந்து விபத்தில் சிக்கியுள்ளார்.

இதையடுத்து அவரும் அவரது மகனும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவரின் விபத்து குறித்த செய்திகள் வெளியாகி இணையத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் எழுப்பியுள்ளன. அவரது ரசிகர்கள் அவர் விரைவாக குணமாகி வரவேண்டும் என பிராத்தனையும் செய்துவருகின்றனர்.