இந்தியா தோல்விக்கு பின்னனியில் இருந்த சர்மாவின் அரசியல்… தோல்விக்கு முழுக்கு முழுக்க இது தான் காரணம்..

0
Follow on Google News

உலக கோப்பை பைனலில் மிக குறைந்த ரன்னே இலக்கு என ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும் போது, அவர்களின் ரன்களை கட்டுப்படுத்துவதால் எந்த பயனும் இல்லை, விக்கெட்டுகளை மளமளவென சரித்து இருக்க வேண்டும். அப்படி மளமளவென விக்கெட்களை சரிக்க வேண்டும் என்றால், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எப்போதும் சவாலாக இருக்க கூடிய ஸ்பின் பௌலிங்கை அதிகம் இந்தியா கையாண்டு இருக்க வேண்டும்.

பீல்டர்களை க்ளோசா நிறுத்தி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து இருக்க வேண்டும், அப்படி செய்திருந்தால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு ப்ரஷர் க்ரியேட் ஆகி அடுத்தடுத்து விக்கெட் விழுந்திருக்கும். இந்த விஷயம் கிரிக்கெட் ரசிகராக இருக்கும் கத்து குட்டிக்கு கூட தெரிந்த ஓன்று.ஆனால், ஆஸ்திரேலியா – இந்தியா இறுதி போட்டியில், ஸ்பின் பவுலிங்கின்போது இப்படிப்பட்ட பீல்டிங் நெருக்கடியைக் கொடுக்காமல் இந்திய பில்டர்களை, பவுண்டரியில் நிறுத்தி ரன்களை மட்டும்
கட்டுப்படுத்திக் கொண்டிருந்த ரோஹித் சர்மா. விக்கெட் எடுக்கும் முயற்சியில் கோட்டை விட்டுவிட்டார்.

ஸ்லிப்பில் பீல்டர் இல்லாத காரணத்தினால் ஸ்லிப்பில் இரண்டு கேட்சுகள் பிடிக்க ஆட்கள் இல்லாமல் அம்போவெனப் போனது, ஸ்லிப்பில் பில்டர் இருந்து இருந்தால், அந்த கேட்ச் பிடிக்கப்பட்டிருக்கும், வார்னர், ஸ்மித் போன்ற பெரிய ஆட்டக்காரர்களை பேஸ் பவுலர்கள் கழற்ற, இந்தியா கைவசம் மாறியது ஆட்டம், ஆனால் அதைத் தொடர்ந்து ஸ்பின்னுக்கு சரியாக ஃபீல்டிங் செட் செய்யாததால் ஆட்டம் கை மாறி போனது.

அந்த வகையில் உலக கோப்பையை வென்று அழியாப் புகழைப் பெற்றிருக்க வேண்டிய கேப்டன் சர்மா ஒவ்வொரு இந்தியாரிடம் இப்படி தலை குனிந்து நிற்பதற்கு காரணம் அவரது குரூர மனதுதான் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.டெஸ்ட் உலகக் கோப்பை இறுதியாட்டத்திலும் சரி, ஒருநாள் உலகக் கோப்பை இறுதியாட்டத்திலும் சரி ரோகித் சர்மா அனுபவம் வாய்ந்த அஸ்வினை வேண்டுமென்றே அணியில் சேர்க்காமல் தவிர்த்ததால் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியாவை ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி எதிர்கொண்ட போதும் அணியில் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இதற்கு உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் திகைத்து கேள்விகளை எழுப்பினர், ஆனால் கேப்டன் சர்மா அதற்கு பதில் சொல்லவேயில்லை. டெஸ்ட் உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் மலைபோல் ரன்களைக் குவித்து வெற்றிக்கு வித்திட்ட இடது கை ஆட்டக்காரர்களான ட்ராவிஸ் ஹெட்டும் அலெக்ஸ் கேரியும், அஸ்வின் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தால் அத்தனை ரன்களை அடித்திருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்தது.

அதே போன்று உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியா வீரர் ட்ராவிஸ் ஹெட்டின் சதம் அடிக்க காரணம் லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமான அஸ்வின் இந்தமுறையும் அணியில் இடம்பெறாமல் போனதுதான். ஆஸ்திரேலியாவை இந்தியா ஸ்பின் பவுலிங்கை வைத்து மட்டும்தான் வீழ்த்த முடியும் என்பதே வரலாறு. இருந்தும் ஏன் அஸ்வின் இல்லை? எத்தனைப் பெரிய வீரன் அஸ்வின்? எவ்வளவு பெரிய கேரீர் அஸ்வினுடையது? அவரை அவரது இறுதி உலகக் கோப்பை போட்டியில் வேண்டுமென்றே
புறக்கணிப்பதும், அதை கிரிக்கெட் உலகம் வேடிக்கை பார்ப்பதும் எத்தனைப் பெரிய கொடுமை?என்கிற பல கேள்விகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் கோபமாக வெளிப்பட்டு வருகிறது.

சூர்யகுமாரை கடைசிவரை பிடித்துத் சர்மா தொங்கிக்கொண்டிருக்க மும்பை இண்டியன்ஸ் மீது இருந்த பாசமா? என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது. மேலும் சூர்யா குமாருக்குப் பதிலாக அஸ்வின் இடம் பெற்றிருந்தால் பந்துவீச்சு பேட்டிங் என இரண்டிலும் கைகொடுத்திருப்பார். சர்மாவின் வன்மம் அதைத்
தடுத்து இந்திய அணியின் வெற்றிக்குக் குழிபறித்து விட்டது என்றே சொல்லலாம்.

தோனி கேப்டனாக இருந்திருந்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் சரி, ஒருநாள் உலகக் கோப்பையையும் சரி தட்டித் தூக்கியிருப்பார். அவரிடத்தில் இந்த வன்மத்துக்கெல்லாம் இடமே இருந்திருக்காது. அஸ்வினை அணியில் இடம்பெறச் செய்து கோப்பையையும் எடுத்துக் கொடுத்திருப்பார் என்கிற தோணி இல்லையே என ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது.